பூமிக்கு மிக அருகில் ஒரு விண்கல்.! இஸ்ரோ எச்சரிக்கை.!

பூமிக்கு மிக அருகில் விண்கல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக இஸ்ரோ எச்சரித்துள்ளது. அப்போபிஸ் என்ற இந்த விண்கல் 13 ஏப்ரல் 2029 பூமியை தாக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி மைதானம் அளவிற்கு பெரியதாகவும், ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பல் போன்ற தோற்றத்தையும் கொண்டுள்ளது. தற்போது இந்த விண்கல் பூமியிலிருந்து 32,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது போன்ற மிகப்பெரிய விண்கல் இதுவரை பூமிக்கு அருகில் வந்ததில்லை என கூறப்படுகிறது.

குற்றால மெயின் அருவியில் பாறை கற்கள் விழுந்ததால் குளிப்பதற்கு தடை

குற்றால மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்த பொழுது மெயின் அருவியின் மேற்பகுதியில் இருந்து பாறை கற்கள் சுற்றுலா பயணிகளின் தலையில் விழுந்ததாக கூறப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் குளிக்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பழனியில் 80 டன் எடை கொண்ட கல்லை குடைந்து செய்யப்பட்ட பிரமாண்ட கருப்பசாமி சிலை!

பழனி மலை அடிவாரத்திற்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து 80 டன் எடை கொண்ட பெரிய கல் கொண்டு வரப்பட்டு சிலை செய்யும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்றது. பல்வேறு சிற்பக் கலைஞர்கள் இணைந்து 17 அடி உயரத்தில் கருப்பசாமி சிலையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தற்போது விருதுநகரில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் இந்த பிரமாண்ட சிலை கயிறு கட்டி கிரேன் மூலம் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டது.