ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இறுதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்க ஆலை நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. வேதாந்தா நிறுவனம் வைத்த கோரிக்கையை அடுத்து இறுதி விசாரணை குறித்து தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி, என்.எல்.சிக்கு ஒரு நீதியா?

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தமிழக அரசு,என்.எல்.சி சுரங்கங்கள் மற்றும் அனல் மின்நிலையங்களால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்க மறுப்பது ஏன்? ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பாதிப்புகளை விட என்.எல்.சியால் ஏற்பட்ட பாதிப்புகள் ஆயிரம் மடங்கு அதிகம். ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஒரு நீதி… என்.எல்.சியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் கடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஒரு நீதி என்பதே பெரும் அநீதி ஆகும். […]