பழனியில் 80 டன் எடை கொண்ட கல்லை குடைந்து செய்யப்பட்ட பிரமாண்ட கருப்பசாமி சிலை!

பழனி மலை அடிவாரத்திற்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து 80 டன் எடை கொண்ட பெரிய கல் கொண்டு வரப்பட்டு சிலை செய்யும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்றது. பல்வேறு சிற்பக் கலைஞர்கள் இணைந்து 17 அடி உயரத்தில் கருப்பசாமி சிலையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தற்போது விருதுநகரில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் இந்த பிரமாண்ட சிலை கயிறு கட்டி கிரேன் மூலம் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டது.
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா

சிலையை முதல்வர் ஸ்டாலின், உ.பி.,முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் திறந்து வைத்தனர். வி.பி.சிங் மனைவி சீத்தாகுமாரி, மகன்கள் அஜய்சிங், அபய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு மாநிலக் கல்லூரியில் ரூ.52 லட்சம் மதிப்பில் சிலை வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்பு
நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும், மறைந்த நடிகருமான கிருஷ்ணாவின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் கமல்ஹாசன்
மு.க.ஸ்டாலின் நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில், புதிதாக நிறுவப்பட்டுள்ள பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வித் துறையின் பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில், புதிதாக நிறுவப்பட்டுள்ள பேராசிரியர் க.அன்பழகன் திருவுருவச் சிலையை திறந்து வைத்து, அச்சிலை அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், பேராசிரியர் அவர்களின் குடும்பத்தினர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.