தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று (24.1.2024) மதுரை மாவட்டம்‌, அலங்காநல்லூர்‌, கீழக்கரை கிராமத்தில்‌ உலகத்தரத்துடன்‌ கட்டப்பட்டுள்ள கலைஞர்‌ நூற்றாண்டு ஏறுதழுவுதல்‌ அரங்கம்‌ திறப்பு விழாவில்‌, அரங்கத்தில்‌ நிறுவப்பட்டுள்ள முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ திருவுருவச்‌ சிலையை திறந்து வைத்தார்

இவ்விழாவில்‌, அமைச்சர்‌ பெருமக்கள்‌, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்‌, தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

கருணாநிதி பணிபுரிந்த இடங்களில் எல்லாம் அவரது சிலை வைக்க ஆசைப்படலாமா.?

–  அண்ணாமலைதமிழக பாஜக தலைவர் ‘சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்’, மறைந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உட்பட பலர் புகழ்பெற காரணமாக இருந்தது. அதன் நிறுவனரான மறைந்த டி.ஆர்.சுந்தரம், திரையுலகின் முன்னோடிகளில் ஒருவர். மேற்சொன்ன தலைவர்கள் அனைவராலும், ‘முதலாளி’ என்று அன்புடன் அழைக்கப்பட்டவர்.பாரம்பரியமிக்க மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தின் நினைவாக, சேலம் ஏற்காடு சாலையில், நினைவு வளைவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், முதல்வர் ஸ்டாலின் அந்த வளைவு முன் நின்று புகைப்படமும் எடுத்தது, சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. […]