தூத்துக்குடியில் வின் பாஸ்ட் கார் உற்பத்தி தொடக்கம்

தூத்துக்குடியில் 16 ஆயிரம் கோடி செலவில் வியட்நாம் நாட்டின் வின் பாஸ்ட் கார் நிறுவனம் தொழிற்சாலையை தொடங்கி 15 மாதத்திற்குள் கார் உற்பத்தியை தொடங்கிவிட்டது இன்று கார் உற்பத்தியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்கள் முதலில் தயாரிக்கப்படும் என்றும் பின்னர் இது 1.5 லட்சம் ஆக உயரும் என்றும் தெரிவித்தனர் இதில் பணியாற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நான் முதல்வன் திட்டத்தில் படித்த தூத்துக்குடி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு திட்டங்களுக்கு ஸ்டாலின் பெயர் பயன்படுத்த தடை

சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி . சண்முகம் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு அறிவிக்கும் நலத்திட்டங்களில் முதலமைச்சரின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைவர்களின் புகைப்படங்களையோ, ஆளும் கட்சியின் சின்னம்/கொடியையோ பயன்படுத்தக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கு பொது நலன் கருதி தொடரப்பட்டதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களை மீறுவதாகவும் வாதிடப்பட்டது. அரசு தரப்பில், குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும், உண்மையான ஆவணங்களை சமர்ப்பிக்க நேரம் கோரப்பட்டது. […]

“சனிக்கிழமைதோறும் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்”

நோய் வராமல் தடுக்கும் முயற்சியாகதமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமைதோறும்`நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்’ திட்டம் ஆரம்பம் ஆக உள்ளது. முகாம் முடிவுகள் அன்றைய தினமேSMS மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும், தமிழ்நாடு முழுவதும்1,256 முகாம்கள் அமைக்கப்படவுள்ளன”கூடுதல் தலைமைச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

ஸ்டாலின் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு

முதலமைச்சர் ஸ்டாலினை இன்று ஓபிஎஸ் சந்தித்து பேசினார் ஸ்டாலின் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது ஓபிஎஸ் சும் அந்த வழியாக வந்தார்.அப்போது ஸ்டாலினுடன் நலம் விசாரித்துவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.ஓபிஎஸ் இன்று அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பதாக இருக்கிறார்.இந்த நிலையில் அவர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருப்பது பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளது தனிகட்சி தொடங்கப் போவதிவில்லை என்றும் ஓபிஎஸ் நேற்று அறிவித்திருந்தார்

உங்களுடன் ஸ்டாலின் – இதுவரை 12.65 லட்சம் மனுக்கள்

உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது திட்ட முகாம்கள் மூலம் மகளிர் உரிமை கோரி5.88 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என

தி.மு.க.வில் இணைந்தார் அன்வர் ராஜா

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைத்து உள்ளார் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததில் இருந்தே அன்வர் ராஜா மனக்கசப்பில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.க.வால் காலூன்ற முடியாது என அண்மையில் அன்வர் ராஜா கூறியிருந்தார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று அவர் தி.மு.க.வில் இணைந்தா

*திமுகவில் 2.5 கோடி பேரை சேர்க்க மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு திமுக தொண்டர்களுக்கும் நன்றி. எண்ணிக்கைக்குக் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவம், ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது கலந்துரையாடுவதை உறுதி செய்ய வேண்டும். மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை திமுக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என -முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு உள்ளாஉள்ளார்

மோடி விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27ஆம் தேதி தமிழகம் வருகிறார் இரண்டு நாட்கள் அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ராஜராஜன் சோழன் பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது

ஸ்டாலின் போல அமைதியாக இரு- அன்புமணிக்கு ராமதாஸ் புத்திமதி

கருணாநிதி தன் இறுதி மூச்சு வரை திமுக தலைவராக இருந்தார். அப்போது, தலைவர் பதவிக்காக ஸ்டாலின் முணுமுணுக்கவில்லை. ஸ்டாலின் போல் அன்புமணியும் அமைதியாக இருக்க வேண்டும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்