திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.T.R.பாலு.B.SC., L.C.E., அவர்களை ஆதரித்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் தெற்கு பகுதியில் காலை மருதம், பாரதிதாசன் நகர், குறிஞ்சி நகர், நைல், இந்திரா நகர், TTK நகர், அர்ச்சனா நகர், 10வது வார்டு, ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R.ராஜா.M.L.A., அவர்கள், நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்,

இந்நிகழ்வில் 4வது மண்டல குழு தலைவர், பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர், திரு.D.காமராஜ் பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் திரு.S.சேகர் தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு.R.S.சங்கர், மாமன்ற உறுப்பினர் திருமதி.ச.இராஜேஸ்வரி வட்ட செயலாளர் திரு.கு.வெங்கடேசன், மற்றும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.
பல்லாவரம் தொகுதியில் டி.ஆர்.பாலு ஓட்டு வேட்டை

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு பல்லாவரம் தொகுதியில் வீதி வீதியாக சென்று ஓட்டுவேட்டை, மகளிர்கள் அகல் விளக்குகளுடன் ரோஜா பூக்களை தூவி வரவேற்பு ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு குரோம்பேட்டை, ராதாநகர், பழைய பல்லாவரம், கீழ்கட்டளை, நியூ காலணி உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் வீதி வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடினார். சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா மற்றும் கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது குரோம்பேட்டை ராதாநகரில் […]
ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலு எம்.பி சிட்லபாக்கம் பகுதியில் குடியிருக்கும் நலசங்க நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார்

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா சிட்லபாக்கம் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் உட்பட வார்டு உறுப்பினர்கள் மற்றும் சர்வமங்களா நகர் சங்கத்தினரும் கலந்து கொண்டு தெரு நாய்கள், மாடுகள் பிரச்சனை, சிட்லப்பாக்கம், செம்பாக்கம் சாலை போக்குவரத்து நெரிசல், செம்பாக்கம் ஏரி தூய்மையாக்குதல், பச்சை மலை மழை நீர் கால்வாய் நீர் ஏரிகளுக்கு வர வேண்டிய கோரிக்கை அனைத்தையும் டி.ஆர்.பாலுவிடம் மனுவாக கொடுத்தனர்.
திமுக அணிக்கு வாக்களிக்க பெண்கள் ஆர்வம் டி.ஆர் பாலு பிரசாரம்

எப்போதும் கண்டிராதவாறு மகளிர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க முன்வந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முதல் நாள பிரச்சாரத்தில் பேச்சு, தற்போது மகளிர்களுகான ஆட்சியை சகோதரனாக செயல்பட்டு திமுக தலைவர் நடத்தி வருகிறார். டி.ஆர்.பாலு பேச்சுக்கு பெண் ஒருவர் உங்களை நம்பிதான் இருக்கோம் என எதிர் குரல் எழுப்பி வேட்பாளரை உற்சாகபடுத்தினார். ஸ்ரீபெரும்புதூர் இந்தியாகூட்டணி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோவில் முன்பாக முதல்நாள் பிரச்சாரத்தை துவக்கினார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் […]
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலையில்

மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கிழ் ரூ.45.24 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட LED மின்விளக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருபெரும்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மாநகராட்சி மேயர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் து.காமராஜ், மாமன்ற உறுப்பினர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாடம்பாக்கம் குளம் சீரமைப்பு திமுக எம்எல்ஏவுக்கு அதிமுக கவுன்சிலர் நன்றி

தாம்பரம் மாடம்பாக்கம் குளம் சீரமைப்பு பணி துவக்க விழாவில் கூடுதல் வசதிகளை வேண்டிய அதிமுக கவுன்சிலர், உடனடியாக அதிகாரிகளை கூடுதல் வசதிகளுடன் மறு திட்டம் தாயாரித்து பணிசெய்ய வலியுறுத்திய திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் மாநகராட்சி மாடம்பாக்கம் நூத்தஞ்சேரியில் மிக பழைமையான குளத்தை 57 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி சுற்றுசுவர் அமைக்கும் விதமாக திட்டத்துடன் மாநகராட்சி அதிகாரிகள் அதன் பணி துவக்க விழா இன்று நடைபெற்றது. தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி […]
தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம், மாடம்பாக்கம் வார்டு-70க்குட்பட்ட நூத்தஞ்சேரி குளத்தில் அம்ருத் 20 திட்டத்தின் கீழ் ரூ.57.00 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் குளத்தினை மேம்படுத்தும் பணிகளுக்கு மேயர் வசந்தகுமாரி கமகைண்ணன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, மண்டலக்குழு தலைவர்கள் சு.இந்திரன், து.காமராஜ், ச.ஜெயபிரதீப் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சி கிழக்கு தாம்பரம், வார்டு-66க்குட்பட்ட ராஜாஜி சாலை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக நியாயவிலை கடை கட்டடம் அமைக்கும் பணிக்கு தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் மேயர் வசந்தகுமாரி கமகைண்ணன், மண்டலக்குழு தலைவர்கள் சு.இந்திரன், து.காமராஜ், ச.ஜெயபிரதீப்சந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.
சிட்லபாக்கத்தில் புதிய கால்நடை மருத்துவமனை உருவாகிறது

சிட்லபாக்கத்தில் 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்நடை மருத்துவமனை, தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா அடிகல்நாட்டி பணிகளை துவக்கினார். சிட்லப்பாக்கத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டுவந்தது. இந்த நிலையில் அதே வளாகத்தில் புதியதாக 90 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டும் பணியை தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கினார். மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், கவுன்சிலர்கள் சுரேஷ், ஜெகன், கால்நடை மருத்துவ அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் […]
பெருங்களத்தூர் குளம் ரூபாய் 1.40 கோடியில் சீரமைப்பு

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூரில் மும்மத பிராத்தனையுடன் ஒருகோடி 40 லட்சம் செலவில் குளம் சீரமைக்கும் பணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தார். தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் மங்கலேரி குளத்தை ஒருகோடி 40 லடசம் மதிபீட்டில் ஆழப்படுத்தி கரைகளுடன் 400 மீட்டர் நடைப்பாதை, சுற்றுசுவர், 20 பேர் அமரும் விதமாக இருக்கைகள், மரங்கள் நடுவு உள்ளி சீரமைக்கும் பணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்தார். இதில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் ஜி.காமராஜ், […]