எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தில் 5 நாட்கள் நடைபெற்ற உலகளாவிய பேராசிரியர் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கிணை எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் நிதின் நகர்கர் தொடங்கி வைத்தார்

இந்த உலகளாவிய பேராசிரியர் மேம்பாட்டு திட்ட நேருக்கு நேர் கருத்தரங்கினை நிபுணர் குழுவை சேர்ந்த உமேஷ் ஜாதவ், எஸ்வந்த் பாட்டில், பூஜா யு.பேர்வானி, முனைவர் வி.சுமதி ஆகியோர் முன்னின்று நடத்தினர்.

எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி, மருந்தியல் துறை, இணைந்து இந்திய மருந்தியல் சங்கத்தின் 53வது ஆண்டு மாநாட்டை நடத்தின

எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி இணைவேந்தர் (கல்வித்துறை) டாக்டர். பி.சத்தியநாராயணன், மருந்தியல்துறையில் தனது பங்களிப்பிற்காக டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் விருதை டாக்டர் தாரிணிக்கு வழங்கினார். எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி துணை வேந்தர் முத்தமிழ்செல்வன், எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி பதிவாளர் பொன்னுசாமி ஆகியோர் உடனிருந்தனர். சங்கர நேத்ராலயாவின் தலைவர் டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

2023ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் படைப்புகளுக்கான எஸ்ஆர்எம் தமிழ்ப்பேராயத்தின் விருதுகளையும், பரிசுத்தொகை ரூ.13 லட்சத்தையும் எஸ்ஆர்எம் நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் எம்.பி.வழங்கினார்

இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலதலைவர் கே.அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்று விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்.இதில் பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்பட்டது.

எஸ்ஆர்எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரி

எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியின் 23வது பட்டமளிப்பு விழாவில் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகத்தில் உள்ள எஸ்ஆர்எம் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.ஆர்.சிவகுமார் முன்னிலையில், டாக்டர் சீத்தாராம் மற்றும் பாரிவேந்தர் ஆகியோர் இளம் பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினர். எஸ்ஆர்எம் குழும நிறுவனங்களின் சென்னை, ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகங்களின் இணைத் தலைவர் எஸ்.நிரஞ்சன், எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி துணைவேந்தர் டாக்டர் சி.முத்தமிழ்ச்செல்வன், ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.எஸ்.குமார், ஆகியோர் உடனிருந்தனர்.

கிறிஸ்துமஸ்‌ கேக் தயாரிப்பு விழா

எஸ்‌.ஆர்‌.எம்‌ இன்ஸ்டிடியூட்‌ ஆஃப்‌ ஹோட்டல்‌ மேனேஜ்மென்ட் கல்லூரியில்‌, பழம்‌ கலவை கொண்டாட்டம் நடந்தது‌. எஸ்‌.ஆர்‌.எம்‌ இன்ஸ்டிடியூட்‌ ஆப்‌ ஹோட்டல்‌ மேனேஜ்மென்ட்டின்‌ இயக்குநர்‌ டி.ஆண்டனி அசோக்‌குமார்‌ தொடக்க உரையுடன்‌, ஜிஆர்டி ஹோட்டல்களின்‌ கார்ப்பரேட்‌ செப்‌ ஹீத்தாராம்‌ பிரசாத்‌ சிறப்புரை ஆற்றினார்‌. பழம்‌ கலவையின்‌ பாரம்பரிய விழா, பாரம்பரிய கிறிஸ்துமஸ்‌ கேக்குகள்‌ மற்றும்‌ இனிப்புகள்‌ தயாரிப்பதில்‌ பயன்படுத்தப்படும்‌ ஒரு தனித்துவமான கலவையை உருவாக்க பல்வேறு வகையான பழங்கள்‌, கொட்டைகள்‌ மற்றும்‌ மசாலாப்‌ பொருட்களை மதுவில்‌ ஊறவைக்கும்‌ வழக்கம்‌ தென்னிந்திய சமையல்‌ […]

காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் நடந்த தேசிய ஊழியர் உறவுகள் மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி

காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியில் நடந்த தேசிய ஊழியர் உறவுகள் மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டி.பி.கணேசன் அரங்கில் விழா நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் அன்பரசன், கலந்து கொண்டார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல் நாத், பதிவாளர் எஸ் பொன்னுசாமி, ஷிமிசிசிமி துணைத் தலைவர் வி.என்.ஷிவ் சங்கர், உள்பட பலர் பங்கேற்றனர். விழாவின் போது பல்வேறு நிறுவனங்களின் பணியாளர்கள் தமிழக அமைச்சரிடம் இருந்து விருதுகளை பெற்றனர். சிறந்த ஐ.ஆர் […]

எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம்

எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் எஸ்.ஆர்.எம் சர்வதேச உறவுகளுக்கான இயக்குநரகம், தைவான் வெளி வர்த்தக மேம்பாட்டு கவுன்சில், இணைந்து தைவான் நாட்டில் உள்ள பிரபல தொழில் நிறுவனங்களின் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தைபே பொருளாதாரம் மற்றும் கலாச்சார மையத்தின் இயக்குநர் ஜெனரல் ரிச்சார்ட் சென், பொருளாதார விவகார அமைச்சின் நிர்வாக அதிகாரி பெய்சி லாய், தாய்ரா’ இன் மேலாளர் ஜீனாயே, தைபே உலக வர்த்தக மையத்தின் இயக்குநர் ஜீல்ஸ் ஷிஹ், எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் சர்வதேச உறவுகளின் […]

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அங்கமான அச்சிறுபாக்கம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள, திருவள்ளுவரின் சிலையை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி.திறந்து வைத்து திருக்குறள் உரை, உலகை ஆளும் திருக்குறள் திருக்குறளை எடுத்தாளும் பாரத பிரதமர் என்ற இரண்டு நூல்களை வெளியிட்டார். ம.ஜவஹர்லால் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு விஜிபி உலகத் தமிழ்ச் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் முன்னிலை வகித்தார். நூல் ஆசிரியர் நல்லசாமி ஏற்புரை வழங்கினார். எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் […]

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மை விழா

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான தொழில்நுட்ப மேலாண்மை விழா ஆரம்பமாக உள்ளது. அதன் துவக்க நிகழ்வில் ஆரூஷ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஏ.ரத்தினம், துணை வேந்தர் முத்தமிழ் செல்வன், முதல்வர் டி.வி கோபால், செய்தி துறை இயக்குநர் ஆர்.நந்தகுமார் மற்றும் ஆரூஷ் குழுவினர் உடனிருந்தனர்.

மாணவர்களை ஈடுபடுத்துவதே ‘நிகர பூஜ்ஜிய உமிழ்வு நாடு’ என்பதை அடைவதற்கான சிறந்த வழி, முன்னாள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் அருகே உள்ள SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கிரீன் டெர்ரே அறக்கட்டளையுடன் இணைந்து கார்பன் நடுநிலைமைக்கான நடவடிக்கைகளுக்கான வரைபடத்தை வரைவதற்காக U75: Net Zero University Campus Regional Workshop ஐ நடத்தியது. கார்பன்-நியூட்ரல் வளாகங்களை உருவாக்க தேவையான அறிவு மற்றும் கருவிகளுடன் உயர் கல்வி நிறுவனங்களை சித்தப்படுத்துவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை […]