கிரிக்கெட் வாரியத்தை கலைத்த இலங்கை அரசு

50 ஓவர் உலக கோப்பையில் இலங்கை அணி தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்தது அந்நாட்டு அரசு. 1996 உலக கோப்பை வென்றபோது கேப்டனாக இருந்த அர்ஜுன ரணதுங்கா தலைமையில், ஓய்வுபெற்ற நீதிபதிகளை உள்ளடக்கிய இடைக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடல் பகுதியில் சீனக் கப்பல் ஆய்வு!

இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பை மீறி இலங்கைக்கு வந்துள்ள சீனக் கப்பல் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ளது. இந்திய பெருங்கடலில் கடல்சார் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக சீனாவின் ‘ஷி யான் 6’ ஆய்வுக் கப்பல் அக்டோபர் மாதம் இலங்கை வரவுள்ளதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வானது இலங்கையின் அண்டை நாடான இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகள் கவலை தெரிவித்தன. இந்தியா மற்றும் அமெரிக்காவின் வலியுறுத்தலை தொடர்ந்து, சீனக் கப்பலுக்கான அனுமதி வழங்குவதில் […]

அபார பேட்டிங்: இலங்கையை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்..!!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றது.புனே, ஐசிசி நடத்தி வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் -இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்காவும், கருணரத்னேவும் களமிறங்கினர். இவர்களில் கருணரத்னே 15 […]

இந்தியா – இலங்கை இடையே செல்லும் பயணிகள் கப்பல் சேவை திடீர் ரத்து

காலை 7.30 முதல் 8.30 மணிக்கு கிளம்ப வேண்டிய கப்பல் திடீரென ரத்தானதால் பயணிகள் ஏமாற்றம் சோதனை ஓட்டத்தின் போது கப்பலில் ஏற்பட்ட டெக்னிக்கல் கோளாறு காரணமாக பயணம் தள்ளிவைப்பு நாகையில் இருந்து, இலங்கைக்கு கப்பலில் கடல் வழி பயணம் மேற்கொள்ள 40 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்

நாகை – இலங்கை இடையேயான பயணிகள் போக்குவரத்து கப்பலின் சோதனை ஓட்டம் தொடங்கியது

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரை கப்பல் சோதனை ஓட்டம். கப்பலின் கேப்டன் உள்ளிட்ட 14 ஊழியர்களுடன் புறப்பட்டது சிரியாபாணி சுற்றுலா பயணிகள் கப்பல். நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை வரும் 10ம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது.

15 தமிழக மீனவர்கள் கைது!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சுமார் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து மூன்று விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது….

அக். 25-ல் சீன உளவு கப்பல் கொழும்பு வருகை: இலங்கை – இந்தியா உறவில் பாதிப்பா?

ராமேசுவரம்: சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவிலிருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங்க் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன. கடந்த வாரம் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி […]

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை நீதிமன்றம் விதித்த தண்டனை காலம் இன்றுடன் முடிவடைவதால் விடுதலை கடந்த 25ம் தேதி நெடுந்தீவு அருகே மண்டபம் பகுதி மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலையான மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்ப்பு