இலங்கை : தலைமன்னாரிலிருந்து மன்னார் வரையிலுமான கடற்கரை பகுதியில்

சந்தேகப்படும் நிலையில் சில மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் தரப்பட்டதை தொடர்ந்து அங்கு விரைந்த அவர்கள், சுமார் 1,318 கிலோ எடையுள்ள பீடி இலைகளை கொண்ட 16 மூட்டைகளை கைப்பற்றினர்.

இலங்கை அதிபராக இன்று அனுரகுமார திசாநாயக்க பதவியேற்பு

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க (56) வெற்றி பெற்றார். இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டாார். கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கை அதிபராக அனுரகுமார திசாநாயக்க இன்று (செப்.23) பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் 2வது இடத்திலும், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே 3வது இடத்துக்கும் தள்ளப்பட்டனர்.

இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 2ம் வாக்கு எண்ணிக்கை

முதல் வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை பெறவில்லை. இதனால், வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் இரண்டாவது விருப்பமாக தேர்வு செய்த எண்ணிக்கை நடக்க உள்ளது. முதல் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த அநுர திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசாவுக்கு விழுந்த வாக்குகள் மட்டுமே 2வது எண்ணிக்கையில் கணக்கில் எடுக்கப்படும். இறுதி எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு மீனவர் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி

புதுதில்லியில் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களை, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் மற்றும் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களின் தலைமையில், மீன்வளம் & மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் கா.நவாஸ் கனி, தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் […]

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச தேர்வு!

நாளை(ஆகஸ்ட் 7) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறது. இலங்கை பொதுஜன பெரமுன கட்சி இலங்கை அதிபர் தேர்தல் வருகிற செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ளது.

2-வது ஒருநாள் போட்டி: வாண்டர்சே அபார பந்துவீச்சு… இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி

கொழும்பு, இந்தியா -இலங்கை இடையிலான 2-வது ஒருநாள் இன்று போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் மற்றும் அவிஷ்கா தலா 40 ரன்கள் அடித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளும், குல்தீப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் […]

2026ல் இந்தியா, இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்த முன்னணி அணிகள்

ஐசிசி டி20 தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் லீக் சுற்றிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாததால், 2026ல் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இந்த அணிகள் இழந்ததுள்ளன. தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாடி வென்றால் மட்டுமே 2026 டி20 உலக கோப்பையில் விளையாட முடியும்.

அரசு தலையீடு: இலங்கை அணியை சஸ்பெண்ட் செய்த ஐசிசி

அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. ஐசிசி, இலங்கைஐசிசி, இலங்கைபுதிய தலைமுறை அரசு தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’தற்போது நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி பெரும்பாலான போட்டிகளில் படுதோல்வி அடைந்து வருகிறது. இதனையடுத்து இலங்கை அரசு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் […]