புண்ணியம் தரும் அமாவாசை

‘பித்ருக்கள்’ என்பது நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள். அவர்கள் தங்களது சந்ததியினர் பாக்ய பலம் பெற, வாழ்வில் முன்னேற, தடைகள் அகல, பல தோஷங்கள் நிவர்த்தியாக வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களுக்கு பூலோகம் வந்து ஆசி வழங்குவதாக ஐதீகம். அதில் அமாவாசை நாள் மிகவும் சக்தி பொருந்திய நாளாகும்.மாதுர்காரகனாகிய சந்திரனும், பிதுர்காரகனாகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே, அமாவாசை எனப்படும் அந்த தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்து உணவு படையலிட்டு ஆசி பெறும் […]
எதிரிகள் தொல்லை நீங்க பிரதியங்கரா தேவி வழிபாடு

நம்முடைய வாழ்க்கையில் நல்ல விஷயம் ஏதாவது நடந்தால் நம் வாழ்க்கை முன்னோக்கி செல்கிறது என்று அர்த்தம். அப்படி நல்ல விஷயங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக நம் உடன் இருப்பவர்களோ அல்லது நம்முடைய விரோதிகளோ ஏதாவது ஒரு செயலை செய்து நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்து வைப்பார்கள். அப்படிப்பட்டவர்களை தான் நாம் எதிரிகள் என்று கூறுவோம். இதில் மறைமுக எதிரிகளாக இருப்பவர்களே மிகவும் கடினமானவர்களாக திகழ்கிறார்கள். இப்படிப்பட்ட எதிரிகள் நம்முடைய முன்னேற்றத்தை தடை செய்வதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வார்கள். […]
எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அனுமதி அளித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு தடை கோரி மேலும் ஒரு மேல்முறையீட்டு மனு தாக்கல்!

அரசுத்தரப்பில் ஏற்கனவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ் வழியில் அர்ச்சகராக பயின்ற அரங்கநாதன் என்பவரும் மேல்முறையீட்டு மனு தாக்கல்!
மத நம்பிக்கை செயல்களுக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது
ஆனால், அவற்றை முறைப்படுத்த வேண்டும் – உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து. நெல்லை மாவட்டம் பாபநாசம் கோயிலில் திதி, தர்ப்பணம் ஆகிய செயல்களால் தாமிரபரணி ஆறு மாசுபடுவதை தடைக்க உத்தரவிடக்கோரி மனுத்தாக்கல். மாசுக்கட்டுப்பாட்டுத்துறை, மாவட்ட ஆட்சியரின் நிபுணர் குழு அங்கு ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு.
புனிதமாக கருதப்படும் துளசி பரிகாரம்

துளசி பரிகாரம்… பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த துளசி, மருத்துவ குணங்கள் மட்டும் நிறைந்ததல்ல, ஜோதிடத்திலும் அது முக்கியப் பங்கு வகிக்கிறது. துளசிச் செடி மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.பெரும்பாலானவர்களின் வீடுகளிலும் துளசி செடி வளர்க்கப்படும். இந்து மத நம்பிக்கையின்படி, துளசிச் செடியை தினமும் வழிபடுவதும், அதற்குத் தண்ணீர் விடுவதும் மங்கல செயலாகக் கருதப்படுகிறது.வீட்டைச் சுற்றி துளசிச் செடிகளை வளர்ப்பதால் நேர்மறை ஆற்றல்கள் கிடைக்கும். துளசிச் செடியை வீட்டில் வளர்ப்பது ஸ்ரீமகாலட்சுமியை மகிழ்விப்பதாக ஐதீகம். ஆனாலும், துளசிச் […]
வீட்டில் பணம் குறைந்து கொண்டே போகிறதா?… நீங்கள் செய்யும் இந்த செயல்கள் தான் காரணம்…

நீங்கள் செய்யும் சில செயல்கள் வீட்டில் செல்வம் குறைய காரணமாக இருக்கிறது. நீங்கள் செய்யும் எந்த செயல்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பார்க்கலாம். 1. கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.. 2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல், ஆண்கள் விளக்கேற்றுவது… 3. தலைமுடி தரையில் உலாவருவது.. 4. ஒற்றடைகள் சேருவது.. 5. சூரிய மறைவுக்கு பின் வீட்டைப் பெருக்குவது, துடைப்பது, தூங்குவது… 6. எச்சில் பொருள்கள், பாத்திரங்கள், காபி கோப்பைகள் ஆங்காங்கே […]
தன்வந்தரியை வணங்கி மருந்து உட்கொண்டால் நோய் நீங்கும்

நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன்பு தன்வந்திரியை நினைத்துக் கொண்டால் நோய் தீரும் என்று புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.காசி மன்னருக்கு மகனாக பிறந்தார் காசியை ஆட்சி செய்து வந்த அரசருக்கு மகனாக பிறந்தார் அப்சா. அவருக்கு தன்வந்தரி என்று பெயர் வைத்தார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ஆர்வம் ஏற்பட்டு, அதில் பெரும் திறமைசாலியாக திகழ்ந்தார். முன்ஜென்மத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடையும்பொழுது அதில் இருந்து அமிர்தத்தை கொண்டுவந்தவர்தான் இந்த அப்சா, அமிர்தத்தில் ஒரு பங்கை தனக்கு தருமாறு விஷ்ணுவிடம் கேட்டார் […]
வீட்டில் விளக்கேற்றும் போது எதை செய்ய வேண்டும்! எதை செய்யக்கூடாது!!!

வீட்டில் காலை 3 முதல் 5 மணிக்குள் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் சர்வமங்கள யோகம் உண்டாகும். அதே போல் மாலையில் 6 மணியளவில் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வேலை, நல்ல வாழ்க்கைத்துணை, புத்திர பாக்கியம், குடும்ப வளம் ஆகியன கிடைக்கும்.தினமும் காலையில் வாசலில் சாணம் தெளித்து, உடல் மற்றும் மனம் சுத்தத்துடன் விளக்கேற்ற வேண்டும். அதேபோல் மாலையிலும் வாசல் தெளித்து கோலம் போட்ட பிறகே விளக்கு ஏற்ற வேண்டும். வீட்டில் விளக்கு ஏற்றும்போது பின் வாசல் கதவை […]
ஆடை தானம்

மானத்தை மறைக்க உதவும் ஆடைதானம் செய்தால் தகாத உறவுக் குற்றங்கள் நீங்கும். பெண்களின் கற்பிற்கு ரட்சையாக இருக்கும்.ராமகிருஷ்ண மிஷன் இல்லங்கள் மற்றும் தேர்நெதெடுக்கப்பட்ட சில முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் இதை செய்யலாம். அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை பிள்ளைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு சீருடை வாங்கித் தரலாம். தெய்வத் திருக்கல்யாணங்கள் நடைபெறும்போதும் ஆடை தானம் (வஸ்திர தானம்) முக்கிய பங்கு வகிக்கிறது.
விநாயகரின் அறுபடை வீடுகள்!!!

முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:-முதல்படைவீடு :-திருவண்ணாமலை திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலேஅல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்’ என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும். இரண்டாம்படைவீடு :-விருத்தாசலம்விருத்தாசலம் இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் […]