மகாளய பட்சம் -& எந்த நாளில் திதி கொடுத்தால் பலன்-?

சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்சப் பிரதமை முதல் அமாவாசைவரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயம் என்று பெயர் உள்ளது.மகாளய பட்ச காலத்தில் மஹாபரணி, மத்யாஷ்டமி, மஹாவியதீபாதம், வைதிருதி, அவிதவா நவமி ஆகிய நாள்களில் தர்ப்பணம் செய்வார்கள்.இந்நாளில் நாம் பொதுவாக என்ன செய்ய வேண்டும் எவ்வாறு வழிப்பட வேண்டும் என்று பலருக்கு குழப்பம் இருக்கும். அதை தீர்க்கும் வகையில் இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.2023 மகாளய பட்சம்முன்னோர்கள் பூலோகம் வரும் மகாளய […]
சனிக்கிழமையில் ஆஞ்சநேயர் வழிபாடு…!!

ராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்சநேயர். இவர் அறிவு, உடல் வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் ஆவார். அவர் பிறந்த தினமே அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இவர் வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவிக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தார்.இவரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். புதன், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவதால் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். ஆஞ்சநேயரை பல விதமான முறைகளில் வழிபாடு […]
புரட்டாசி சனிக்கிழமை பூஜை முறைகள்

புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசியால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் […]
குரு தோஷம் நீக்கும் குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள்

தன் மகன் கசனுக்காக நலம் வழங்கும் நாராயணரை நோக்கி குரு பகவான், தவம் செய்த சிறப்பு மிக்க தலம் தான் சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலாகும். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறையில் அமைந்துள்ளது இக்கோவில், சுமார் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இத்திருத்தலத்தில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள். இக்கோவில் வரலாறானது குரு பகவான் தன் மகனுக்காக வைகை நதிக்கரையில் தவம் மேற்கொண்டு வந்தார் அப்போது குருவின் தவத்தால் மகிழ்ந்த […]
மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற லால்பாக்சா ராஜா விநாயகர் கோயிலில், நடிகர் ஷாருக்கான் தனது மகனுடன் சாமி தரிசனம்
திருப்பதி பிரம்மோற்சவத்தின் 4-ம் நாளான நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் கற்பகவிருட்ச வாகனத்தில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

இதில் யானை, குதிரை, காளை ஆகிய பரிவட்டங்கள் முன்னால் செல்ல, பல்வேறு மாநிலநடனக் கலைஞர்கள் மாட வீதிகளில் நடனமாடியவாறு சென்றனர். இதைத்தொடர்ந்து இரவு சர்வபூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்பரும், ஸ்ரீ கிருஷ்ணரும் கோயில் முகப்பு கோபுர வாசலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். பின்னர் 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்துஅருள் பாலிப்பர். இதைத்தொடர்ந்து இன்று இரவு […]
வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை விரட்ட
முழு முதற் கடவுளான விநாயகருக்கு வெள்ளெருக்கு உகந்த செடியாக இருக்கிறது. 5 வெள்ளெருக்கு பூவை முச்சந்தியில் இருக்கும் விநாயகருக்கு சமர்ப்பித்தால் நாம் நினைக்கும் காரியம் தடையின்றி நடக்கும். வெள்ளெருக்கு செடியிலிருந்து தயாரிக்கப்படும் திரியை உபயோகப்படுத்தி விளக்கேற்றுவதன் மூலம் நம் வீட்டில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகள் அனைத்தும் வெளியேறும் என்பது நம்பிக்கை
குடை தானம்
குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும். குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.குடை தானம் என்பது நேரடியாகவும் செய்யலாம். சற்று மாறுபட்டும் செய்யலாம்.இந்த காலங்களில் நமக்கு பலவிதங்களில் சேவையாற்ற வருபவர்கள் உண்டு. உதாரணத்துக்கு தபால்காரர், கூரியர் பாய், பால்காரர், சிலிண்டர் கொண்டு வந்து போடும் ஊழியர்ஞ். இவர்கள் எல்லாம் வெயில் மழை பாராமல் பணியாற்றுபவர்கள். இவர்களுக்கு நல்ல ரெயின் கோட் ஒரு செட் வாங்கித் தரலாம்.நீங்கள் நன்றாக கவனித்தீர்கள் என்றால் புரியும், […]
வீட்டு வாசலில் விளக்கேற்றுங்கள்

வீட்டில் உள்ள பிரச்சனைகளில் இருந்து விடுபட தினமும் வீட்டின் நுழைவு வாயிலில் விளக்கு வைக்குமாறு கூறப்படுகிறது.மாலையில் தீபம் ஏற்றுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், அந்தி வேளையில் வீட்டு வாசலில் தீபம் ஏற்றினால் அன்னை இலட்சுமி தேவி வந்து சேருகிறாள். இது தவிர, வீட்டிற்குள் ஏதாவது எதிர்மறை ஆற்றல் இருந்தால் அதன் சக்தி முழுமையாக குறையும் என நம்பப்படுகிறது.வீட்டின் பிரதான வாசலில் தீபம் ஏற்றி வைப்பதன் மூலம் இராகுவின் தோஷங்களும் தீரும். கிரக தோஷத்தை போக்க, ஏதேனும் […]
பித்ருக்கள் ஆசி பெற தேவையான பொருட்கள்
பித்ருக்கள் நமது வீட்டிற்கு ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு முதல் நாள் அன்று வருகை தருவர். வந்து, அமாவாசை முடியும் வரை இரண்டு நாட்கள் வரை தங்குவர்.அவர்கள் வருவதும்,வந்து நம்மை ஆசிர்வதிப்பதும் யுகம் யுகமாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.அப்படி வரும் போது அவர்கள் தங்கும் பொருட்கள் பட்டியல்:உரல், ஆட்டுக் கல்,செம்புப் பாத்திரம், நெல் மூட்டை, அரிசிப்பானை, நறுமணம் தரும் பூக்கள், மூங்கிலில் செய்யப்பட்டட பொருட்கள், சுரைக் குடுவை, துளசி மாடம், பசு, மிருதங்கம், மாங்கல்யச் சரடுகள், வெட்டி […]