காற்றின் வேகம் குறைந்துள்ளதால் தமிழக காற்றாலைகளில் மின்னுற்பத்தி சரிவு

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு காற்றின் வேகம் குறைந்துள்ளதால் கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது 92 கோடி யூனிட் காற்றாலை மின்னுற்பத்தி குறைந்துள்ளது. தமிழகத்தில் தற்போது பல்வேறு நிறுவனங்கள் 9,100 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்களை அமைத்துள்ளன. ஆண்டுதோறும் மே முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றாலை மின்னுற்பத்தி சீசன் ஆகும். சீசன் சமயத்தில் வழக்கமாக காற்றாலைகளில் இருந்து தினமும் 8 முதல் 10 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தியாகும். நடப்பு சீசனில் காற்றின் வேகம் போதிய அளவுக்கு இல்லை. […]

வந்தே பாரத் ரயில்களின் வேகம் விரைவில் குறைப்பு

ரயில்கள் சந்திக்கும் விபத்துகள் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. இதற்கு, ரயிலின் வேகமும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட சில வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட்ட, வந்தே பாரத், கதிமான் ரயில்களின் வேகத்தை மணிக்கு 130 கி.மீ.ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்காடு பேருந்து விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது!..

மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக செல்ல வேண்டிய நிலையில், 50 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் சென்றதாக தகவல் ஓட்டுநரின் லைசென்சை முடக்குவது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போக்குவரத்து துறை தகவல் விபத்துக்குள்ளான பேருந்தின்உரிமையாளரை நேரில் அழைத்து விசாரணை நடத்த திட்டம் பேருந்துக்கான உரிமங்கள் உட்பட அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பது தெரியவந்துள்ளது 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்ததில், 6 பேர் உயிரிழப்பு – 65 பேருக்கு தீவிர சிகிச்சை “ஏற்காடு […]