அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சை பேசிய மகா விஷ்ணுவின் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

திருப்பூரில் உள்ள மகா விஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் நேற்று போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்று அவரை மீண்டும் சென்னை அழைத்து வருகின்றனர்.
நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர் -பிரதமர்

நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். பேரிடர்களில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு தேசமே துணை நிற்கிறது செங்கோட்டை முதல் கடைக்கோடி கிராமம் வரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் மூலம் குறுகிய காலத்தில் 12 கோடி இல்லங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2.50 கோடி குடும்பங்களுக்கு முதன்முறையாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 2040க்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பது வெறும் வெற்று முழக்கம் அல்ல 140 கோடி மக்களின் கனவு. […]
ராஜினாமா ஏன்?- குஷ்பு விளக்கம்

“தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய யாரும் அழுத்தம் தரவில்லை” “கட்சி சார்பில் உழைக்க வேண்டும் என்பதற்காக பதவி விலகினேன்” “கட்சி பதவிக்காக பேரம் பேசும் பழக்கம் எனக்கு இல்லை” “எனது முழு கவனமும் அரசியலில் தான் உள்ளது, கட்சிக்காக பணியாற்றுவதே முழு திருப்தி”
காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி

காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு தருவோம் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். அணையில் இருக்கும் நீரைத்தான் எங்களால் வழங்க முடியும் என்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது 50,000 கனஅடி நீர் வருகிறது என்றும் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் குறைகளை தீர்க்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கோரிக்கை
அரசு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு மக்களின் குறைகளை போக்க வேண்டும் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற ஊரக பகுதி மனுநிதி மூகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் கேளம்பாக்கத்தில் ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போர் விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியகுழு தலைவர் எல் இதயவர்மன், கேள்ம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த […]
கல்விக்கு அதிக நிதி ஒதுக்க விஐடி வேந்தர் வேண்டுகோள்

கல்விகாக நிதி ஓதுகீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். கல்வி ஒன்றே வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் வி.ஐ.டி கல்விக்குழு நிறுவன தலைவர் ஜி விஸ்வநாதன் பேச்சு. சென்னை வண்டலூர் வி.ஐ.டி கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் வருகையை முன்னிட்டு புத்தக பயிற்சி திட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வி.ஐ.டி கல்விக்குழு நிறுவன தலைவர் ஜி.விஸ்வதான், முன்னள் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் மாணவர்களிடம் உறையாற்றினார்கள். அப்போது பேசிய ஜி.விஸ்வநாதன் கல்வி ஒன்ரே நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும், மத்திய […]
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறுகையில்

“தமிழகத்தில் சமீபகாலமாக 17 சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழக பாஜக மூத்த தலைவர்கள் டெல்லியில் தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் அதிகாரிகளை சந்திக்க உள்ளனர். தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவருக்கு நீதி கிடைக்க வேண்டும். மறைந்த கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரிக்குமாறு மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் கேட்டுக்கொள்கிறோம்
சோஷியல் மீடியாவில் சிலர் புரளி பேசுகிறார்கள்; அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாதீர்கள்

நல்லவர்களை கெட்டவர்கள் போலவும், கெட்டவர்களை நல்லவர்கள் போலவும் சித்தரிக்கிறார்கள்; வரும் செய்திகளில் எது உண்மை, எது பொய் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் தவெக தலைவர் விஜய் பேச்சு
“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்;

அதிமுக ஒன்றிணை வேண்டும், இதுதான் கட்சி தொண்டர்களின் எண்ணமும் தான்; இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு ஒன்றிணைய வேண்டும்”
மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது: பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்

மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த எனது கணிப்பு தவறாகிவிட்டது. பாஜகவுக்கு 300 சீட்கள் வரை கிடைக்கும் என நாங்கள் கணித்தோம். ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இனி எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.