தமிழகத்தில் 26ம் தேதி மிக கனமழை

“தென் தமிழகத்தில் வருகிற 26ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு” இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை “தென் தமிழகத்தில் 25 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு” “கடலோர ஆந்திரா, ஏனாம், கேரளா, மாகே பகுதிகளில் வரும் 26, 27 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு” “நிக்கோபார் தீவுகளில் 22 முதல் 24 வரை கனமழைக்கு வாய்ப்பு” “ராயலசீமாவில் 26 மற்றும் 27 ஆம் தேதி கனமழை பெய்யும்”

முதல்வர் தென் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும்

இந்தநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்க வேண்டிய இடம் தென் தமிழகம். ஆனால், முதல்வர் I.N.D.I.A கூட்டணி கூட்டத்திற்காக டெல்லி சென்றுள்ளார். ஹெலிகாப்டரில் இருந்து மீட்புப்படை வரை இங்கு வேலை செய்கிறார்கள். முதலமைச்சர் எங்கு சென்றார்- நெல்லையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

தென் மாவட்டங்களில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக ₹2000/- கோடியை அவசர நிதியாக வழங்க வேண்டும்

டெல்லியில், பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்.வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள ₹.12,659 கோடியை விடுவிக்க வேண்டும். – பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ₹.2000 கோடியை விடுவிக்க வேண்டும். தற்காலிகமாக ₹.7033 கோடியை வழங்க வேண்டும் – – வெள்ள பாதிப்பாக ₹.12,659 கோடி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை