சென்னையின் “கடும் குளிர்”

சென்னையில் நிலவும் “கடும் குளிர்” குறித்து பலரும் கேட்கிறார்கள். காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று பகல் நேர வெப்பநிலை இயல்பை விட மிகக் குறைவாக இருந்தது. இது நாளை மற்றும் நாளை மறுநாளும் நீடிக்கலாம் (இருப்பினும் வெப்பம் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது). பொங்கல் பண்டிகை முதல், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வெப்பநிலை குறையத் தொடங்கும். இதனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இரவு நேரங்களில் குளிர் நிலவும். மதிய நேரங்களில் மீண்டும் வெப்பம் அதிகரித்து, சென்னையின் […]

வானிலை முன்னெச்சரிக்கை.குளிர் நீடிக்கும்.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விடக் குறைவான வெப்பநிலையே நீடிக்கும். வட தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் இரவு நேரக் குளிர் அதிகமாக இருக்கும். அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 13°C முதல் 14°C வரை குறைய வாய்ப்புள்ளது. சென்னை நிலவரம்: இன்றும் நாளையும் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் மற்றும் நகரின் சில இடங்களில் இரவு நேர வெப்பநிலை 20°C-க்குக் கீழ் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

டெல்லி பனிமூட்டம் வாகன விபத்துகளில் 13 பேர் உயிரிழப்பு

ய​முனா விரைவு சாலை​யில் கடும் பனி மூட்​டம் காரண​மாக வாக​னங்​கள் அடுத்​தடுத்து மோதி பேருந்து தீப்​பிடித்து எரிந்​த​தில் 13 பேர் உயி​ரிழந்​தனர். உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு பிரதமர் மோடி, உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் ஆகியோர் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர். டெல்லி உள்​ளிட்ட வட மாநிலங்​களில் கடும் பனிப்​பொழிவு தொடங்கி உள்​ளது. இதனால் அதி​காலை​யில் சாலை​யில் முன்​னால் செல்லும் வாக​னங்​கள் பார்வைக்கு தெரி​யாத நிலை உள்​ளது.