அதிகரிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு: மாதம் ’21 ஜி.பி. டேட்டா’ பயன்படுத்தும் இந்தியர்கள்

இந்தியாவில் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை வயது வேறுபாடு இன்றி அனைவரையும் இந்த செல்போன் அடிமைப்படுத்தி இருக்கிறது. வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களும், பல்வேறு வசதிகளுடன், இணையதளத்தின் வேகத்தையும் அதிகரித்து நவீனப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சார்பில் சுகாதாரத்துறையில் 5ஜி பயன்பாடு குறித்த கருத்தரங்கு ஒன்று நேற்று திருப்பதியில் நடந்தது. இதில் டிராயின் தலைவர் அனில்குமார் […]
‘விவோ V29e’ ஸ்மார்ட்போன் டீசர்

விவோ நிறுவனம் ‘Vivo V29e’ மாடலை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இதன் டீசர் வெளியாகி உள்ளது. இதை பார்க்கும்போது இந்த போன் வளைந்த கர்வுடு டிஸ்பிளேவை கொண்டுள்ளது என தெரிகிறது. மேலும் 64MB ரியர் கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 400, 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய வசதிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை விவரம் வெளியாகவில்லை.
ரூ.8,000 ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி

அமேசான் விற்பனை தளத்தில் ‘ஐடெல் ஏ60எஸ்’ மாடல் ஸ்மார்ட்போனுக்கு 26% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.8,499 என்ற விலையில் அறிமுகமான இந்த போனை இப்போது ரூ.6,299க்கு வாங்க முடியும், அதாவது மொத்தமாக ரூ.2,200 விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும், எஸ்பிஐ வங்கி கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.600 வரை கூடுதல் தள்ளுபடியும் பெறலாம்.