கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு தயாராக இருந்தால், நானும் அமைச்சர் சேகர் பாபுவும் அங்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக உள்ளோம்

முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் தயாராகும் வரையில் கோயம்பேட்டில் இருந்து அவர்கள் பேருந்துகளை இயக்கிக்கொள்ளலாம் என்பதே உயர் நீதிமன்ற உத்தரவு -போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேட்டி

பொங்கல் சிறப்பு பேருந்துகள் திட்டமிட்டபடி இயக்கப்படும்

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை. வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மாதவரம், கிளாம்பாக்கம், தாம்பரம், பூந்தமல்லி, புறவழிச்சாலை, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கம். தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் சிவசங்கர்-அமைச்சர் சிவசங்கர்.

அரசின் திட்டங்களை கூர்மைப்படுத்துவதே எங்களின் நோக்கம் – போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு மகளிர் விலையில்லா பயணத்திட்டம் பயன்படுகிறது என்பதை ஆய்வறிக்கையின் அடிப்படையில் அறிந்து திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்தவது தான் ஆய்வின் நோக்கம். பயணம் செய்யும் மகளிரிடம் பெயர், வயது உள்ளிட்ட விவரங்களை சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் பதில்.

கரூர் மாவட்டம் குளித்தலையிலிருந்து சென்னைக்கு பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கேள்வி

கடந்த ஆண்டில் அந்த வழித்தடத்தில் பேருந்து சேவையை நிறுத்தியுள்ளனர் . ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.