இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளதா?

சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 257 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் கொரோனா நிலைமையை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, அச்சப்பட தேவையில்லை” – என மத்திய அரசு கூறி உள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

உரிய முன்னறிவிப்பின்றி, முன்கூட்டியே புறப்பட்டு சென்ற விமானம்

திருச்சி விமான நிலையத்தில் செய்வதறியாது தவிக்கும் 25 பயணிகள் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மாலை 4.20 மணிக்கு பதிலாக 3 மணிக்கே புறப்பட்டு சென்ற விமானம்.

புதிய வகை கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” – தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை!

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்திய ஜெ.என்.1 வகையிருந்து உருமாற்றமடைந்தது தான் என்றும் இதனால் பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அங்கிருந்து 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் உலகம் முழுவதும் […]

சிங்கப்பூரின் 9வது அதிபராக பதவியேற்றார் தமிழ் வம்சாவளி தர்மன் சண்முகரத்னம்!

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் 66, பதவியேற்றார். தேர்தலில் தர்மனுக்கு 76 சதவீத சிங்கப்பூர் மக்கள் ஓட்டளித்திருந்தனர். சமீபத்தில் சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 66, சீன வம்சாவளிகளான இங் கொக் செங் 76, டான் கின் லியான் 75, ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து அதிபர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டது. ஆனால் தேர்தலில் தமிழ் வம்சாவளியான தர்மன் […]

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழர் தருமன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தருமன் சண்முகரத்னத்திற்கு பிரதர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா – சிங்கப்பூர் இருதரப்பு உறவில் இணக்கமான சூழலை ஏற்படுத்த தருமன் சண்முகத்தோடு இணைகிறேன் என கூறியுள்ளார். சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தருமன் சண்முகரத்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தருமன் சண்முகரத்னத்திற்கு எனது வாழ்த்துக்கள். தருமனின் ஈர்க்கக்கூடிய தகுதிகள், தமிழ் பாரம்பரியம் எங்களை பெருமைப்படுத்துகிறது. சிங்கப்பூர் அதிபராக தருமன் […]

சிங்கப்பூரின் அதிபரான ஈழத்தமிழர்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தன்னுடன் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களையும் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13-ம் […]

சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக டாக்டர் ரிஜ்வானா பேகம் நியமனம்.

கூத்தாநல்லூரைப் பூர்வீகமமாகக் கொண்ட பாரம்பரியமிக்க சடையன் குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் ரிஜ்வானா பேகம் சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். கூத்தாநல்லூர் மர்ஹூம் பேனாத்தானா ஹாஜி அப்துர் ரஹீம், சடையன் ஹஜ்ஜா மஹ்மூதா பேகம் அவர்களின் மூத்த மகளான டாக்டர் ரிஜ்வானா பேகம் அப்துர் ரஹீம், சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டாக்டர் ரிஜ்வானா சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் பொதுப் பாதுகாப்பு பாடத்திட்ட தலைவராகவும், துணை பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். குடும்ப நல […]

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டி

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமா. இவரது 6 ஆண்டு பதவிக் காலம் செப்டம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைகிறது. இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அதிபர் ஹலிமா கடந்த மே மாதம் 29-ம் தேதி அறிவித்தார். இதனால் சிங்கப்பூரின் அடுத்த அதிபருக்கான தேர்தல் செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடுவதற்காக கேபினட் அமைச்சர் பதவியில் இருந்த தர்மன் சண்முகரத்னம் தனது ராஜினாமா அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டார். இவர் கடந்த 1957-ம் […]