கும்மிடிப்பூண்டி | சரக்கு ரயிலின் மேல் ஏறி செல்ஃபி எடுத்த வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து காயம்.

கும்மிடிப்பூண்டி அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டியில் ஏறி, செல்ஃபி எடுத்த வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து காயமடைந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்னஓ புளாபுரம் பகுதியில் தனியார் பிளைவுட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரேஷ்குமார்(18), நேற்று முன்தினம், சென்னை- சூளூர்பேட்டை ரயில்வே மார்க்கத்தில், சின்ன ஓபுளாபுரம் பகுதியில் உள்ள ரயில் பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் […]