நாகை, இலங்கை கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு:

நாளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைப்பு. புதிய கப்பலுக்கு சர்வதேச பயணத்திற்கான அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவதில் சிக்கல்.

உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல் ‘ஐகான் ஆப் தி சீஸ்’ பயணத்தை தொடங்கியது

கப்பலில் மீத்தேன் கசிய வாய்ப்பு என சூழலியலாளர்கள் அச்சம்!! மியாமி: உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பலான ‘ஐகான் ஆப் தி சீஸ்’ அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தில் உள்ள மியாமில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. கரும்பச்சை கடற்பரப்பில் நகரும் இந்த பிரமாண்டமான கப்பல் 1198 அடி நீளம் கொண்டதாகும். 20 அடுக்குகள் கொண்ட கடல்நீரில் நகர்ந்து செல்லும் மிதக்கும் மாடமாளிகையில் ஒரே நேரத்தில் 10,000 பயணிகள் வரை செல்லலாம். இந்திய மதிப்பில் சுமார் ரூ.16,700 கோடி […]

அடுத்த நீர்மூழ்கி கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்பிய அமெரிக்கா

தென் கொரியா – வட கொரியா இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவம் தனது 2வது நீர்மூழ்கி போர்க் கப்பலை தென் கொரியாவுக்கு அனுப்பியுள்ளது. ‘யுஎஸ்எஸ் அனாபோலிஸ்’ என்றழைக்கப்படும் இந்தக் கப்பல், தென் கொரியாவின் தெற்கு தீவான ஜெஜூவில் உள்ள கடற்படை தளத்தை அடைந்துள்ளது. இரு நாடுகளும் இணைந்து நட்பை பறைசாற்றும் வகையில், அணிவகுப்பு நடத்தவுள்ளன.

உலகின் பிரம்மாண்ட பயணக் கப்பல்

1,200 அடி நீளம், 250,800 டன் எடை கொண்ட பிரம்மாண்ட கப்பல், ‘ஐகான் ஆஃப் தி சீஸ்’, 2024ம் ஆண்டு தொடக்கத்தில் தனது முதல் பயணத்தைத் தொடங்க உள்ளது. இதில், ரிசார்ட், தீம் பார்க், பீச் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன. இது, உலகின் மிகப்பெரிய கப்பலான வொண்டர் ஆஃப் தி சீஸை விட 6% பெரியது.