சென்னை சேப்பாக்கம், பொதுப்பணித் துறை அலுவலகக் கூட்டரங்கில், மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள்மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு

பொதுப்பணித் துறையில் பணியாற்றி, பணிக்காலத்தின் போது மறைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் மூன்று நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்வின் போது,பொதுப்பணித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் திரு.மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப. முதன்மைத் தலைமைப் பொறியாளர் திரு.கே.பி.சத்தியமூர்த்திஆகியோர் உடனிருந்தனர்.
எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடல் அரிப்புத்துறை தடுக்கும் பிரிவு உதவி பொறியாளர் பாஸ்கரன் ஒப்பந்ததாரர்களிடம் உரிமம் புதுப்பிக்க லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. சோதனையில் 2.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.