அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதே தவறு; அனைத்து கோப்புகளையும் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவு ஜாமின் மனுவையும் விரைந்து முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம்

எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிபதி எம்.சுந்தர் அறிவுறுத்தல்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்: ஆக.28-ம் தேதி விசாரணை

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டுள்ளது. சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14 அன்று கைது செய்தனர். பின்னர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 5 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரித்தனர். […]

இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இதுவரை எந்த நீதிமன்றமும் அவரை குற்றவாளி என்று சொல்லவில்லை

எனவே அவர் அமைச்சராக தொடர்வதற்கு எந்த தடையும் இல்லை. இதைவிட ஒரு முக்கியமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்கி இருக்கிறது. அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளிவந்த ஆடியோ ஆதாரமற்றது என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. அது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களா முடக்கம்

கரூர்: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் புதிதாக கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த வீட்டை விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது என சார்பதிவாளர் அலுவலகத்துக்கு அமலாக்கத் துறையினர் கடிதம் அளித்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரதுஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் கடந்த மே 26-ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது, கரூர் நாமக்கல் புறவழிச் சாலையில் ராம் நகர் […]

செந்தில் பாலாஜியின் சகோதரரின் 2.49 ஏக்கர் சொகுசு பங்களா முடக்கம்.. அமலாக்கத் துறையினர் அதிரடி

கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டி வரும் சொகுச பங்களாவை அமலாக்கத் துறை முடக்கியது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார். இவர் கரூர் – சேலம் புறவழிச்சாலையில் 2.49 ஏக்கர் பரப்பளவில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அவருடைய மனைவி நிர்மலா பெயரில் இந்த வீடு கட்டப்படுகிறது. இந்த நிலையில் இந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கியதில் மோசடி செய்ததாகவும் இந்த வீட்டிற்கு தேவையான கட்டுமான பொருட்கள், கிரானைட் கற்கள் […]

செந்தில் பாலாஜி வழக்கில், இறுதி அறிக்கை தாக்கல் செய்ய 6 மாதம் அவகாசம் கோரிய இடையீட்டு மனு

புலன் விசாரணை குறித்து அறிக்கை அளிக்க எவ்வளவு அவகாசம் தேவை என்று உச்சநீதிமன்றம் கேள்வி விளக்கம் அளிக்க தமிழக மத்திய குற்றப்பிரிவுக்கு 30 நிமிடங்கள் அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம் இல்லையெனில் தமிழக டிஜிபி, உள்துறை செயலாளர் ஆஜராக உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை

அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 2வது நாளாக இன்றும் அமலாக்கத்துறை விசாரணை

உச்சநீதிமன்ற அனுமதியை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் 10 மணி நேரத்தைக் கடந்து விடிய விடிய அமலாக்கத்துறை விசாரணை மொத்தம் 200 கேள்விகள் கேட்க முடிவு = நாளொன்றுக்கு 50 கேள்விகள் என்ற அடிப்படையில் விசாரணை தீவிரம் 2வது நாளாக இன்றும் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை அமலாக்கத்துறை விசாரணை நடப்பதால் சாஸ்திரி பவன் வளாகத்தை சுற்றிலும் மத்திய பாதுகாப்பு படை […]

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு ஆகஸ்ட் 12 வரை அமலாக்கத்துறை காவல்

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு; அமலாக்கத்துறை மனு மீதான விசாரணையின் போது செந்தில் பாலாஜி காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.