அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு

சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ முறையீடு செய்தார். மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றநீதிபதி அறிவித்துள்ளார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்திருந்தது.

#BREAKING செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் அக்.13ம் தேதி வரை நீட்டிப்பு 7வது முறையாக காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 8 இடங்களில் சோதனை

சென்னை நுங்கம்பாக்கம், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி ஏற்கனவே சிறையில் இருக்கிறார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஐகோர்ட் உத்தரவை அடுத்து ஜாமின் மனுத்தாக்கல் செய்துள்ளதாக முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லியிடம் முறையிட்டுள்ளனர். முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி மனுத்தாக்கல் செய்ய அனுமதி அளித்துள்ளார்.