6 மாதங்களாக சிறையில் இருந்துக்கொண்டு அமைச்சராக இருப்பதாலேயே அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன

மக்களவை தேர்தலுக்கு முன்பு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்தாண்டு ஜூன் 13-ல் கைது செய்தது. அவர் மீது 3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவரது ஜாமின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளபடாமல் தள்ளுபடி யான நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார். இருப்பினும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து இன்று தனது பதவியை இன்று செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததாக […]
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு பிடிவாரண்ட் கோரி மனு – அமலாக்கத்துறை நடவடிக்கை

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் ஆஜராகுமாறு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அசோக் குமார் ஆஜர் ஆகாததால் அமலாக்கத்துறை கைது வாரண்ட் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் மனு தாக்கல்.
செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணையை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 17வது முறையாக நீட்டிப்பு

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்ததால் காவல் நீட்டிப்பு செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் பங்களா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு

கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகரில் அசோக்குமார் மனைவி பெயரில் பங்களா கட்டி வருகிறார். வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, பங்களா கட்டிடத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ரெட்டிபாளையம் பகுதியில் கொங்கு மெஸ் உணவக கட்டிடத்தில் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – வரும் 12-ம் தேதி தீர்ப்பு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பு

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்க துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 3- வது முறையாக ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்தார் .இம்மனு மீது இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வருகிற 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்;

அமலாக்கத்துறை கூறும் காரணம் ஏற்கும்படி இல்லை என வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு
செந்தில் பாலாஜி வழக்கு – காவல்துறை தகவல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகைக்கு ஒப்புதல் மற்றும் விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தகவல் விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது சிறப்பு நீதிமன்றம்
நவ.15ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று காலை டிஸ்சார்ஜ் ஆனார்

டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.