செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை முடிந்து விட்டது” – அதிமுக தலைவர் செம்மலை
அதிமுக தலைவர் செம்மலை கூறியதாவது. ஊர் ஊராக சென்று கொடியேற்றி ஆட்சியை பிடிப்பேன் என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயம். செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை முடிந்து போன ஒன்றாகி விட்டது” இவ்வாறு செம்மலை தெரிவித்தார்.
அமித்ஷாவிடம் பேசியது என்ன? எடப்பாடி விளக்கம்
கடந்த வாரம், செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோரும் உடன் சென்றார். பின்னர் அமித் ஷாவும், பழனிசாமியும் தனியே கலந்துரையாடினர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு […]
வெறிச்சோடிய செங்கோட்டையன் இல்லம்
ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் இல்லம் வெறிச்சோடியது. செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. செங்கோட்டையனை சந்திக்க கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆதரவாளர்கள் வந்தனர். கடந்த ஏழு நாட்களாக செங்கோட்டையன் இல்லம் ஆதரவாளர்களுடன் நிரம்பி இருந்தது. இன்று தற்போது வரை ஆதரவாளர் யாரும் செங்கோட்டையனை சந்திக்கவில்லை. அவரது இல்லம் வெறிச்சோடி காணப்படுகிறது.