தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட திருமலை நகர் கிளை நூலகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்தும் வாசிப்பு திருவிழா மற்றும் தனி திறனாளர்களுக்கான கோலப்போட்டிகள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியினை செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயப்பிரதீப்சந்திரன் துவக்கி வைத்தார்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் திருமதி கிரிஜாசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவிற்கான ஏற்பாடுகளை திருமலை நகர் கிளை நூலக வாசிப்புசங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது முன்னதாக மண்டலகுழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
செம்பாக்கத்தில் வெள்ள மீட்பு பணிக்கு எந்திரங்கள் தயார்

தாம்பரம் மாநகராட்சி 3 வது மண்டலம், செம்பாக்கம், காமராஜபுரம், சிட்லப்பாக்கம், திருமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், மீட்பு பணிகளுகாக உபகரணங்களாக மரம் வெட்டும் இயந்திரங்கள், நீர் இறைக்கும் மோட்டார், மணல் மூட்டைகள், ஜே.சி.பி இயந்திரங்கள், லாரிகள், டார்ச் லைட், குடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தயார் படுத்தப்பட்ட நிலையில் மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து தயாரக இயக்கி பார்த்தனர்.
செம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம்

செம்பாக்கம் தெற்கு பகுதி திமுக 41 வட்டம் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞத் நூற்றாண்டு மற்றும் திராவிட மாடல் அரசின் விளக்கப்பொது கூட்டம் பகுதி செயலாளர் இரா.சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. பகுதி துணை செயலாளர் லட்சுமிபதிராஜா தலைமை வகித்தார். திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், தமிழ்நாடு தோல் தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் விளக்கி பேசினார்.. மத்தியில் ஆளும் பாஜக சதான பாசிச ஆட்சி நடைபெறுவதாக கூறிய அவர் […]
செம்பாக்கத்தில் கண் தானம் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் பம்மல் சங்கர கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்து பேரணியில் கலந்துகொண்டார். இதில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கண் தானம் குறித்து விளம்பர பதாகை கலை கைகளில் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு செம்பாக்கம் முதல் சேலையூர் ஸ்ரீ சங்கர பள்ளி வரை 3 கி.மீ தூரம் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க […]
தெருநாய்களின் தொல்லை – பொதுமக்கள் அச்சம் :

தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளையும், பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் பயமுறுத்திக்கின்றது. ஆதலால் அச்சத்தோடு அவ்விடத்தை கடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கின்றது. இதற்கு தாம்பரம் மாநகராட்சி தலையிட்டு தெருநாய்களின் தொல்லையை விரைந்து தீர்க்குமாறு திருமலை நகர் 17தெரு பகுதிமக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்.இடம்: திருமலை நகர் 17தெரு, சீயோன் பள்ளி எதிரில், செம்பாக்கம்.
செம்பாக்கம் மண்டலம் அலுவலகத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலக கட்டடம்

தாம்பரம் மாநகராட்சி, செம்பாக்கம் மண்டலம் அலுவலகத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் அலுவலக கட்டடத்தினை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, மண்டலக்குழு தலைவர்கள், ச.ஜெயபிரதீப், தூ.காமராஜ், சு.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செம்பாக்கம் பூங்காவில் 12-7-2023 அன்று நடை பெறுவதாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் நேர்காணல்இடமாற்ற அறிவிப்பு
வரும் 12-7-2023 புதன் அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை செம்பாக்கம் அன்னை அஞ்சுகம் அம்மையார் பூங்காவில் நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் அளிக்கும் முகாம் பூங்கா பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதால் கீழ்க்கண்ட முகவரியில் உள்ள எனது வீட்டில் அதே நாளில் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும் என தெரிவித்துக் கொள்கிறேன். இந்த […]