காமராஜுடன் மோடியை ஒப்பிட்ட தமிழிசை – காங்கிரஸ் எதிர்ப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழிசை சவுந்தரராஜன் மோடி ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என பேசி இருக்கிறார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற வெறுப்பு அரசியலையும், அதிகாரங்களை குவித்து வைத்துக்கொண்டு, சர்வாதிகார பாசிச முறையில் மோடியின் ஆட்சி செயல்பட்டு வருகிறது. அந்த ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது தமிழிசை சவுந்தரராஜனின் அறியாமையை காட்டுகிறத என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மாற்றப்படுவாரா? டெல்லி மேலிடத்தில் மூத்த நிர்வாகிகளும் புகார்

தன் மீது தவறான தகவலை பரப்பியதாக பகுஜன் சமாஜ் நிர்வாகி மீது ரூ.100 கோடி கேட்டு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் சில எம்.பிக்கள் டெல்லி தலைமையிடம் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.