ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் யோகா ஆர்வலர்களுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்த பிரதமர்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா ஆர்வலர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி செல்ஃபி எடுத்துக்கொண்டார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது: ஸ்ரீநகரில் யோகா செல்ஃபிகள் பதிவு! இங்கே தால் ஏரியில் ஈடு இணையற்ற அனுபவம்.

கும்மிடிப்பூண்டி | சரக்கு ரயிலின் மேல் ஏறி செல்ஃபி எடுத்த வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து காயம்.

கும்மிடிப்பூண்டி அருகே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் பெட்டியில் ஏறி, செல்ஃபி எடுத்த வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து காயமடைந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்னஓ புளாபுரம் பகுதியில் தனியார் பிளைவுட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அம்ரேஷ்குமார்(18), நேற்று முன்தினம், சென்னை- சூளூர்பேட்டை ரயில்வே மார்க்கத்தில், சின்ன ஓபுளாபுரம் பகுதியில் உள்ள ரயில் பாதையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் […]

ரயில் பாதையில் நின்று, ‘செல்பி’ எடுத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-தெற்கு ரயில்வே.

ரயில்வே பாதையை கடப்பது, ரயில்வே சட்டப்படி குற்றம். ரயில் தண்டவாளத்தில் நடந்து செல்வது, விளையாடுவது, விளம்பர மோகத்தில், ‘செல்பி’ எடுப்பது போன்ற செயல்களால், பலர் உயிர் இழக்க நேரிகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். மீறி செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல், ரயில் பாதையில் அல்லது ரயில் இன்ஜின் அருகே சென்று, ‘செல்பி’ எடுத்தால், 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது, ஆறு மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்- தெற்கு ரயில்வே.