சினிமா படத்திற்காக சேலையூர் அருகே 1000 மாணவர்கள் உலக சாதனை

சேலையூர் அடுத்த மப்பேட்டில் உள்ள தனியார் பள்ளியிலமாணவர்களிடம் தன்நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் டாக்டர் சீனி சவுந்தரராஜன் அவருடைய தயாரிப்பில் புதிய படத்தை இயக்கி உள்ளார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதனை முன்னிட்டு கபில் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படத்தை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 1000 ஆயிரம் மாணவர்கள் கபில் ரிட்டர்ன்ஸ் வடிவில் நின்று உலகசாதனை படைத்தனர். இதனை ஐன்ஸ்டின் உலகசாதனை நிறுவனம் அங்கிகரித்து படத்தின் இயக்குனர் சீனி சவுந்தரராஜனுக்கு, […]

சேலையூர்‌ பகுதியில் அம்மா உணவகத்தில் மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஆ.ர.ராகுல்நாத் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம்‌, தாம்பரம்‌ மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர்‌ பகுதியில் அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஆ.ர.ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் ஆர்.அழகுமீனா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் உள்ளனர்.

சேலையூர்‌ பகுதியில்‌ அரசினர்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ மாணவர்களுக்கு வழங்கப்படும்‌ சத்துணவு குறித்து ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம்‌, தாம்பரம்‌ மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர்‌ பகுதியில்‌ அரசினர்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ மாணவர்களுக்கு வழங்கப்படும்‌ சத்துணவு குறித்து சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை ஆணையர்‌ வே.அமுதவல்லி மற்றும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஆ.ர.ராகுல்‌நாத்‌ ஆய்வு மேற்கொண்டார்கள்‌. இந்த ஆய்வில்‌ மாநகராட்சி ஆணையர்‌ ஆர்‌.அழகுமீனா பள்ளி தலைமை ஆசிரியர்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உடன்‌ உள்ளனர்‌.

சேலையூர் பள்ளி தலைமை ஆசிரியருக்கு சீர்வரிசை கொடுத்து மாணவர்கள் பிரியாவிடை

சேலையூரில் தாம்பரம் மாநகராட்சி அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. 34 ஆண்டுகளாக செயல்படும் இந்த பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக தலைமை ஆசிரியராக எம்.ஆனந்தபாபு என்பவர் பொறுப்பேற்றார். சேலையூர் ஊர் பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர்கழகத்துடன் இணைந்து பள்ளியின் தரம் உயரவும், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படவும் பாடுப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரின் அரசுப் பள்ளி ஆசிரியராக துவங்கி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இந்த தகவல் அறிந்து பெற்றோர் […]

சேலையூரில் லவ் பேர்ட்ஸ் கூண்டுக்குள் புகுந்த பாம்பு

தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் சையத், இவர் வீட்டில் இரும்பு கம்பி கூண்டில் லவ் பேட்ஸ் ஜோடிகளை வளர்த்து வந்தார். வழக்கம்போல் காலை பார்த்தபோது லவ்பேட்ஸ் அலறியவாறு ஒரே பானை மீது அமர்ந்து அச்சத்துடன் இருந்துள்ளது. இதனால் கூண்டில் பார்த்தபோது பாம்பு ஒன்று பதுங்கியதை பார்த்துள்ளார். இதனையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த நிலையில் தாம்பரம் தீயணைப்பு வீரர்கள் நேரில் வந்து பாம்பு பிடிக்கும் கருவி மூலமாக லவ்பேட்ஸ் பானை கூட்டில் பதுங்கிய 4 அடி நீளமுள்ள […]

குரங்கு தொல்லை

சேலையூர் ராஜேஸ்வரி நகர் சந்தானலட்சுமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. .வீட்டு முன்பு போடப்பட்டிருக்கும் பால் பாக்கெட் எடுத்து குரங்கு பால் குடிக்கும் காட்சி.