சென்னை: பட்டினப்பாக்கத்தில் வழக்கத்தை விட அதிக சீற்றத்துடன் காணப்படும் கடல்..!

கடல் அலை வழக்கத்தை விட 3.7 மீ வரை மேலெழும்பக்கூடும் என இந்திய கடல்சார் தேசிய மையம் எச்சரிக்கை.
இலங்கை : தலைமன்னாரிலிருந்து மன்னார் வரையிலுமான கடற்கரை பகுதியில்

சந்தேகப்படும் நிலையில் சில மூட்டைகள் கரை ஒதுங்கியுள்ளதாக இலங்கை கடற்படையினருக்கு தகவல் தரப்பட்டதை தொடர்ந்து அங்கு விரைந்த அவர்கள், சுமார் 1,318 கிலோ எடையுள்ள பீடி இலைகளை கொண்ட 16 மூட்டைகளை கைப்பற்றினர்.
“நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி”

நாளை மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஒரிசா, வடக்கு ஆந்திரா கரையோரம் அதற்கு அடுத்த 2 நாள் நிலவக்கூடும்.
கன்னியாகுமரி மாவட்ட கடற்பகுதியில் இன்றும் நாளையும் சீற்றம் இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால்,

மீனவர்களும் கடலோரங்களில் வசிப்போரும் தேவையான முன்னெச்சரிக்கையுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் சுற்றுலா பயணிகள் கடற்பகுதிக்கு செல்ல தவிர்க்கவும் கோரிக்கை
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்குத் தடை!
இந்தியா – ஜப்பான் கடலோர காவல் படைகள் கூட்டுப்பயிற்சி

2006ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகள் கூட்டுப்பயிற்சி கூட்டு பயிற்சியில் பங்கேற்க சென்னை துறைமுகம் வந்த ஜப்பான் கப்பல் ‘யாஷிமா’ இந்திய கடலோர காவல் படையின் 10 கப்பல்கள், ஜப்பானின் யாஷிமா கப்பல் பங்கேற்பு
15 தமிழக மீனவர்கள் கைது!

தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து செல்வது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சுமார் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து மூன்று விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 15க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே தென்கிழக்கு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது….
ராமநாதபுரம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் திடீரென உள்வாங்கிய கடல்

சுமார் 50 மீ. தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சம் காலநிலை மாற்றத்தால் கடல் உள்வாங்கி இருக்கலாம் என மத்திய கடல் ஆராய்ச்சியாளர்கள் தகவல்
சென்னை காசிமேட்டில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேர் மீட்பு!

சென்னை காசிமேட்டிலிருந்து மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் தத்தளித்த 9 மீனவர்களை கடலோர காவல்படை மீட்டது. ஆகஸ்ட் 24-ம் தேதி கடலுக்குச் சென்ற மீனவர்கள் 9 பேர் படகு பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்தனர். சென்னையிலிருந்து 240 நாட்டிகல் மைல் தொலைவில் மீனவர்கள் தத்தளித்ததை கடலோர காவல்படை கண்டறிந்தது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவானது.