முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌

இன்று (25.08.2023) முதலமைச்சர்‌‌ மாநிலம்‌ முழுவதும்‌ அனைத்து பள்ளிகளிலும்‌ 1ஆம்‌ வகுப்பு முதல்‌ 5ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டத்தை விரிவாக்கம்‌ செய்து நாகப்பட்டினம்‌ மாவட்டம்‌, திருக்குவளையில்‌ தொடங்கி வைத்ததைத்‌ தொடர்ந்து, தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ துணைமேயர்‌ கோ.காமராஜ்‌, பம்மல்‌ மண்டலத்திற்குட்பட்ட திருநீர்மலை பகுதியில்‌ மாநகராட்சி துவக்கப்‌பள்ளி மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி, மாணவர்களுடன்‌ அமர்ந்து உணவருந்தினார்‌. இந்நிகழ்ச்சியில்‌ மாமன்ற உறுப்பினர்கள்‌ உட்பட பலர்‌ கலந்துகொண்டனர்‌.

தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌

மு.க.ஸ்டாலின்‌ இன்று (25.8.2023) இந்தியாவிலேயே முதல்‌ முறையாக தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில்‌ 1 முதல்‌ 5ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ 17 இலட்சம்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ தொடங்கி வைக்கும்‌ விதமாக, முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்கள்‌ பிறந்த ஊரான திருக்குவளையில்‌ உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்‌ பள்ளியில்‌, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டத்தை அவர்களுக்கு உணவு […]

திருவஞ்சேரி பள்ளி மாணவர்கள் 118 பேருக்கு இலவச மிதிவண்டி

தாம்பரம் அடுத்த திருவஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 118 மாணவ மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாம்பரம் சட்டபேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். திருவஞ்சேரி ஊராட்சிமன்ற தலைவர் ஜனனி சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்…

திரிசூலம் ஊராட்சி ஓன்றி நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளையினர் சார்பில் 75 மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினார்

சென்னை அடுத்த திரிசூலம் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு P. S. வெங்கடேசன் அன்பளிப்பில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சங்கரா பால வித்யாலயா பள்ளியின் கல்வியாளர் செம்பாக்கம் வேதாசுப்பிரமணி கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி தரம் குறித்து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் 75 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் […]

திரிசூலம் ஊராட்சி ஓன்றி நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளையினர் சார்பில் 75 மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினார்

சென்னை அடுத்த திரிசூலம் புனித தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஏகஜோதி தொண்டு அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு P. S. வெங்கடேசன் அன்பளிப்பில் சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சங்கரா பால வித்யாலயா பள்ளியின் கல்வியாளர் செம்பாக்கம் வேதாசுப்பிரமணி கலந்து கொண்டு மாணவர்களின் கல்வி தரம் குறித்து சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் 75 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் […]

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மூத்த அதிகாரி சஸ்பெண்ட்

தெலங்கானா, ஐதராபாத் அருகே உள்ள ஹக்கிம்பேட் நகரில் உள்ள மாநில விளையாட்டு பள்ளியில் மூத்த அதிகாரி ஒருவர், மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அந்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்வதாக அம்மாநில விளையாட்டுதுறை அமைச்சர் அறிவித்தார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாங்குநேரி பரபரப்பு அடங்குவதற்குள்.. ஏற்காடு மாண்ட்ஃபோர்டு பள்ளியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்…..!!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள மாண்ட்ஃபோர்டு பள்ளியில், ஏழை மாணவர்களுக்கு வழங்க, வழக்கம் போல் மாண்ட்ஃபோர்டு பள்ளியால் செய்யப்படும் கேக்கை ஏலம் எடுக்கும் நிகழ்வு, கடந்த வாரம் நடத்தப்பட்டுள்ளது. இதில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகி, சண்டை ஏற்பட்டுள்ளது சண்டையைத் தொடர்ந்து, ஹாஸ்டலில் தங்கியிருந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் சிலரை, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சிலர் அடித்துள்ளனர். இதில் ஸ்ரீ ரித்தீஷ் என்ற பத்தாம் வகுப்பு மாணவர் பதில் […]

அரசுப் பள்ளிகள் வளர்ச்சிக்கு கிராமசபையில் தீர்மானம்

சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி கிராமசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் சமீபத்தில் நடைபெற்ற எஸ்எம்சி கூட்டத்தில் பள்ளி வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவுகளை பகிர்ந்து கொண்டு விவாதித்து உரிய தீர்மானங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமசபை கூட்டங்களில் எஸ்எம்சி குழுதீர்மானங்களை பகிர்வதன் மூலம்பள்ளிகளின் தேவைகளை அறிந்துகொண்டு பொதுமக்கள் தங்களின் பங்களிப்பை அளிக்க […]

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை

ஆடி கிருத்திகையையொட்டி ரத்தினகிரி முருகன் கோவில் விழாவால் விடுமுறை விடுமுறையை ஈடுசெய்ய வரும் 12ம் தேதி வேலை நாளாக அறிவித்த கலெக்டர் வளர்மதி

கே.வி. பள்ளிகளில் எம்.பி.களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டமில்லை.

நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில், எம்.பி.க்களுக்கான இடஒதுக்கீடு திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் எண்ணம் இல்லை என மக்களவையில் இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி தகவல். 788 எம்.பி.க்களின் பரிந்துரையில், 7800 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு மத்திய அரசு இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது. அதிக மாணவர்கள் சேர்க்கப்பட்டதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக அரசு விளக்கம்.