பள்ளிகளுக்கு விடுமுறை

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் டிச.4 ம் தேதி விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

இளம்பிள்ளை அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்

காக்காபாளையம்:தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் சேலம் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி சேலம் நெத்திமேடு ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் கருப்பூர் எஸ்.எஸ்.ஆர்.எம் மேல்நிலைப் பள்ளியை எதிர்த்து களம் கண்ட இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 15-க்கு 11 என்ற புள்ளியில் வென்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர்.அதேபோல் 17 வயதுக்கு உட்பட்டோ ருக்கான போட்டியில் சேலம் ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணியை எதிர்த்து […]

செங்கல்பட்டில் விடுமுறை இல்லை: பள்ளிக்கு நனைந்து சென்ற மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்தார். ஆனால் காலை முதல் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், வரதராஜபுரம், சேலையூர் செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வரும் நிலையில் அரசு, அரசு உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் நனைந்தவாறு பள்ளிக்கு சென்றனர். மேலும் மாணவர்களை பெற்றோர் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் நனைந்தவாறு அழைத்து சென்றனர்…

பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,400.. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,500… உணவுத் தொகையை உயர்த்தி வழங்கிய தமிழக அரசு!!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உணவுக்கான உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. முன்னதாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,000 ஆகவும் அதேபோல, கல்லூரி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,500 ஆகவும் இருந்தது. இந்த நிலையில், கடந்த அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற […]

அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் மாலை நேர நீட் பயிற்சி – தொழிற்கல்வி இணை இயக்குனர்

மாலை 4 மணிமுதல் 5.30 மணி வரை நீட் பயிற்சி அளிக்க உத்தரவு. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை பயிற்சி அளிக்க திட்டம். ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி – யாரையும் கட்டாயப்படுத்த கூடாது.

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை..!!

புதுவை விடுதலை நாளையொட்டி இன்று புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறையாகும்.புதுச்சேரி, புதுவை விடுதலை நாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. மேலும் கல்லறை திருநாள் நாளை (வியாழக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. புதுவை விடுதலை நாளையொட்டி இன்று புதுவையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறையாகும். கல்லறை திருநாளுக்கு கிறிஸ்தவர்கள் நடத்தும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிப்பது வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் இந்த ஆண்டு கல்லறை திருநாளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குனர் […]

மேற்கு தாம்பரம் பள்ளி பவள விழா எஸ் ஆர் ராஜா பங்கேற்பு

செங்கல்பட்டு மாவட்ட ம் மேற்கு தாம்பரம் மாந்தோப்பு பகுதியில் 1948 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட எம்.சி.சி.ஆர்.எல் உயர் நிலை பள்ளி துவங்கி 75 ஆண்டு ஆவதை முன்னிட்டு இன்று இப் பள்ளியில் 75 ஆண்டு பவள விழா இன்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பின் பவள விழா மலர் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சென்னை கிறிஸ்தவ கல்லூரியின் முதல்வர் வில்சன், மற்றும் […]

குரோம்பேட்டை நேரு நகரில் உள்ள ஸ்ரீ அய்யாசாமி அய்யர் பள்ளி

குரோம்பேட்டை நேரு நகரில் உள்ள ஸ்ரீ அய்யாசாமி அய்யர் பள்ளியில் சர்வதேச ரோட்டரி சங்கம் டோக்கியோ சுயோசின் ரோட்டரி சங்கம் இணைந்து தொடக்க பள்ளிக்கு (1 முதல் 5ம் வகுப்பு வரை) 5 ஸ்மார்ட் போர்டு நன்கொடையாக வழங்கப்பட்டது.பள்ளி செயலர் ஆர். மனோகரன், பள்ளி உறுப்பினர் சி.ஆர்.நரசிம்மன், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெ.இராஜஸ்ரீ, துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ரோசாலி, ஆசிரியர்கள் ஆகியோர் முக்கிய பிரமுகர்கள் மகாவீர் போத்ரா, பாலசந்திரன், மணிவண்ணன் மற்றும் வந்திருந்த அனைவரையும் […]