பெருங்களத்தூரில் 162 மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்கள்

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகரில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். புயல் மழையில் வீடுகள் முழுகியது. தங்கியவர்களை மட்டும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் வீடு திரும்பிய அவர்களுக்கு நேற்று முந்தினம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் ஆசிரியர்கள் உணவு, குடிநீர் வழங்கினார்கள். அப்போது “4ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரி தங்களின் நோட்டு புத்தகம் முழுவதும் நனைந்துவிட்டது. உடைகளும் இல்லை என வருத்தமுடன் தெரிவித்துள்ளார். […]

குரோம்பேட்டையில் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்

குரோம்பேட்டையில் இயங்கி வரும் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சென்னை மண்டலம் மற்றும் மாவட்டம் சார்பாக நடைப்பெற்ற (டேபிள் டென்னிஸ்) மேசைப் பந்தாட்டம், குண்டு எறிதல், தொடரோட்டம், தடைகளைத் தாண்டி ஓடும் தொடரோட்டம், சிலம்பம், மற்போர் முதலான போட்டிகளில் பங்கேற்று 13 பதக்கங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் மற்றும் இரண்டு மாணவர்கள் மாநில அளவிலான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மழைநீர் வடியாததால் 4 பள்ளிகளுக்கு விடுமுறை

மழைநீர் வடியாத காரணத்தால் சென்னை போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை பூந்தமல்லியில் உள்ள சரோஜினி வரதப்பன் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று விடுமுறை புதூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் இன்று விடுமுறை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 4,435 பள்ளிகளில் மழை நீர் சூழ்ந்திருந்தது

தற்போது மழை நீர் வெளியேற்றப்பட்டு நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் 20,000 புத்தகங்கள் சேதுமடைந்துவிட்டதாக தகவல் பெறப்பட்டுள்ளது. 32 பள்ளிகளில் மட்டும் சுவற்றில் தண்ணீர் ஊறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்போம். மழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடத்துவது குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் […]

டிச.11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

அனைத்து பள்ளிகளும் 11.12.2023 முதல் முழுமையாக செயல்படவும், அரையாண்டுத் தேர்வுகளை எவ்வித புகார்களுக்கு இடம் தராமல் திட்டமிட்டு நடத்திடவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

+1, +2 மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு தேதி மாற்றம்?

சென்னை கல்வி மாவட்டத்தில் டிச.7ல் நடைபெறவிருந்த 11, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு தேதி மாற்றப்பட உள்ளதாக தகவல் தேர்வு தேதி மாற்றம் தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் 7ஆம் தேதி மாணவர்கள் தேர்வுக்கு வருவதில் சிரமம் இருக்கக்கூடும் என்பதால் தேதியை தள்ளிவைக்க ஆலோசிக்கப்படுவதாக தகவல்

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

வங்கக்கடலில் வலுப்பெறும் புயல் வரும் 5ஆம் தேதி காலை நெல்லூர்- மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கிறது.இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிவித்துள்ளது சென்னையில் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது புயல் சென்னை கடற்கரை ஓரமாக நகர்ந்து சென்றாலும் சென்னையில் அதன் தாக்கம் இருக்கும் எனவே புயலை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் செய்துள்ளனர் தாம்பரம் மாநகராட்சிகளும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனையில் இன்று […]