பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பிக்கும் திட்டத்தை நாளை கோவையில் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நாளை முதலே இதனை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம்.

மாணவர்கள் வளர் இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35 லட்சம் செலவில் 10 ஆலோசகர்களை பணியமர்த்த உள்ளோம்

சென்னைப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வளர் இளம் பருவத்தில், எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக ரூ.35 லட்சம் செலவில் 10 ஆலோசகர்களை பணியமர்த்த உள்ளோம். -சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு!

9ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!

இஸ்ரோவின் இளம் விஞ்ஞானி (யுவிகா) திட்டத்தில் சேர இன்று முதல் பதிவு செய்யலாம். 9ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் இத்திட்டத்தில் சேர jigyasa.iirs.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் மே 13ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில், மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பண்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவு வழங்கப்படும்.

பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் – சென்னை மாநகர காவல்துறை

சென்னையில் 5 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை. சென்னை அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம் ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர். பள்ளிகளில் சோதனை செய்ததில் எந்தவித மர்மப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என காவல்துறை விளக்கம்.

பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றமில்லை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வுகான அனைத்து விதமான அட்டவணையும் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றார் போலத்தான் மக்களவை தேர்தல் தேதி இருக்கும் -அமைச்சர்

சென்னையில் வரும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும்!

மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளம் காரணமாக விடுமுறை விடப்பட்ட நாட்களை ஈடுசெய்யும் வகையில் சென்னை மாவட்டத்தில் வரும் வாரங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!

ஸ்ரீ ஹயகிரீவர் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி சிட்லபாக்கம் தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் சுமார் 500 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன், பா.பிரதாப் Ex.Mc, ஆகியோர் கோப்பையை வழங்கினர். அருகில் பவித்திரா ஜெகன்

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிலம்ப பயிற்சி தாம்பரம் மேயர் தகவல்

தமிழக அரசு சிலப்ப விளையாட்டுக்கு கல்வி, உயர் கல்வியில் இடஒதுகீடு அறிவித்த நிலையில் மாணவர்களிடம் சிலம்பம் கற்கும் ஆவர்வம் அதிகரித்துள்ளது. அதுபோல் தாம்பரம் மாநகராட்சி அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் படிக்கும் மாணவ, மணவியர்கள் மாநில அளவிளான சிலம்ப போட்டியில் பங்குபெற்று யுவனேஷ், அகல்யா, சங்கர தனுஷ் ஆகிய மாணவர் முதல் பரிசும், அதுபோல் இரண்டாம் முன்றாம் இடம் என 14 மாணவர்கள் ஒரே போட்டியில் பரிசுகோப்பைகளை பெற்றுவந்தனர். அவர்களை மற்ற பள்ளிமாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற பாராட்டுவிழாவில் தாம்பரம் […]