சேலையூர்‌ பகுதியில்‌ அரசினர்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ மாணவர்களுக்கு வழங்கப்படும்‌ சத்துணவு குறித்து ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம்‌, தாம்பரம்‌ மாநகராட்சிக்கு உட்பட்ட சேலையூர்‌ பகுதியில்‌ அரசினர்‌ மேல்நிலைப்‌ பள்ளியில்‌ மாணவர்களுக்கு வழங்கப்படும்‌ சத்துணவு குறித்து சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்‌ துறை ஆணையர்‌ வே.அமுதவல்லி மற்றும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஆ.ர.ராகுல்‌நாத்‌ ஆய்வு மேற்கொண்டார்கள்‌. இந்த ஆய்வில்‌ மாநகராட்சி ஆணையர்‌ ஆர்‌.அழகுமீனா பள்ளி தலைமை ஆசிரியர்‌, ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அரசு அலுவலர்கள்‌ உடன்‌ உள்ளனர்‌.

மணற்கேணி’ செயலி நாளை அறிமுகம்!

நாட்டிலேயே முதல்முறையாக காணொலி வடிவத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு பாடங்களை அளிக்கும் மணற்கேணி என்ற செயலியை நாளை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு

10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு வெளியாகும் தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வரும் 26ம் தேதி வெளியாகும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. (ஜூலை 24) 12ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இத்தகவலை தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 27 – ஜூலை 5ம் தேதி வரை 10ம் வகுப்பு துணைத் தேர்வு நடைபெற்றது.

சிட்லப்பாக்கம், அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிட்லப்பாக்கம், அரசு உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆலோசனைப்படி, போதை விழிப்புணர்வு மன்றத்தின் சார்பிலும், மூத்த குடிமக்கள் சார்பிலும் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இக்கூட்டத்திற்கு விகி வில்யம் தலைமையாசிரியர் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காவல் துணை கண்காணிப்பாளர் லஷ்மி, ஷி.மீனாட்சி சுந்தரம், கிஙிநிறி ஹரிதாசன், நி பக்தவசலம் வியாபாரிகள் சங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மாணவ மாணவியர்களுக்கு போதை, குடியின் தீமைகளை எடுத்துரைத்துரைத்தனர். போதை இல்லா பள்ளி எக்காலத்திலும் போதை தீயவஸ்துகளுக்கு இடம் தர மாட்டோம் […]

ரோசிலி மெட்ரிக் பள்ளி வெள்ளி விழா தொடக்கம்

சிட்லபாக்கம் ரோசிலி மெட்ரிக் பள்ளியின் வெள்ளி விழா துவக்க விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் டாக்டர். ஜே. விட்டோ பிளாக்கா கலந்து கொண்டு, கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியில் தனது பயணத்தை ஊழியர்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். பிரதம விருந்தினர் கே.பிருதிவிகுமார், பள்ளி இன்னும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக முன்னேற வாழ்த்தினார். சந்திரவேல் சிறப்புரைகள் ஆற்றினார். பள்ளி முதல்வர் டி.ஜோதி ரம்யா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் என்.சி.ஜெயலட்சுமி பள்ளியின் வரலாறு குறித்து பேசினார். மாணவர்கள் வண்ணமயமான […]

குரோம்பேட்டை வியாபாரிகள் சங்க அறக்கட்டளை

குரோம்பேட்டை வியாபாரிகள் சங்க அறக்கட்டளை சார்பில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடைகள் நோட்டு, புத்தகங்கள், இனிப்புகள் வழங்கினர்-. இந்நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் எஸ்.மதிவாணன், துணை தலைவர் பி.பழனி, செயலாளர்கள் ஏ.ஏ.முருகேசன், எஸ்.லியாகத்தலி பொருளாளர் ஆர்.மோரீஸ், அறக்கட்டளை தலைவர் ஆ.ராமஜெயம், செயலாளர் பி.இளையராஜா, பொருளாளர் எஸ்.டி.சேகர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

குரோம்பேட்டை புருஷோத்தம நகரில் இயங்கி வரும் சி.இ.எஸ் பள்ளி

குரோம்பேட்டை புருஷோத்தம நகரில் இயங்கி வரும் சி.இ.எஸ் பள்ளியில் படிக்கும் சுமார் 10 மாணவ மாணவிகளுக்கு உதவும் உள்ளங்கள் சார்பாக பள்ளிச் சீருடைகள் உதவும் உள்ளங்கள் சந்தானம், லயன் காஞ்சி எஸ்.கணேசன் வழங்கிய போது எடுத்த படம்.

தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழுவேலை நாளாக இயங்கும் என அரசு அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் நாளை பள்ளிகள் செயல்பட உள்ளது. காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் உத்தரவு.

இரவு நேர பாடசாலையை தொடங்க நடிகர் விஜய் முடிவு

காமராஜர் பிறந்தநாளில் (ஜூலை 15 ) 234 தொகுதிகளிலும் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு நேர பாடசாலையை விஜய் மக்கள் இயக்கம் தொடங்குகிறது; விழியகம், குருதியகம், விருந்தகத்தை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இரவு நேர பாடசாலையை தொடங்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்