தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்பிஐ வங்கி தேர்தல் ஆணையத்தில் வழங்கிய தரவுகள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு

Future Gaming and Hotel services நிறுவனம் மிக அதிகமாக ரூ.1368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது. Mega Engineering and infrastructure limited நிறுவனம் 821 கோடி ரூபாயும், வேதாந்தா நிறுவனம் ரூ.375.65 கோடியும் வழங்கி உள்ளன. Haldia Energy Limited ரூ.377 கோடியும், Quick Supply chain private Limited ரூ.410 கோடியும் வழங்கி உள்ளன.

பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம்.. மத்திய அரசு தகவல்

உணவு கேட்டரிங் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்காக அன்னபூர்ணா யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலம் சமையல் உபகரணங்கள், குளிர்சாதனப்பெட்டி, எரிவாயு இணைப்பு, சாப்பாட்டு மேஜைகள் வாங்கலாம். இந்தக் கடன்களின் வட்டி விகிதங்கள் சந்தையைப் பொறுத்து மாறுபடும். கடன் தொகையை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். எஸ்பிஐ கிளையைத் தொடர்பு கொண்டு பெண்கள் இந்தக் கடனைப் பெறலாம்.