முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில், நடிகர் சரத்குமார் மகள் வரலட்சுமி & நிகோலாய் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு

மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்.

பாஜக அணியில் அஇசமக

பாஜக கூட்டணியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இணைந்துள்ளது.இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில் திருநெல்வேலி அல்லது தூத்துக்குடி தொகுதியில் ஆர்.சரத்குமார் அல்லது ராதிகா சரத்குமார் தாமரை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

சரத்குமாருக்கு கேக் ஊட்டிவிட்ட ராதிகா

நடிகை ராதிகா, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னதிரையிலும் பல தொடர்களை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ராதிகா திரைத்துறையில் அறிமுகமாகி 45 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனை அவர் தன் கணவர் சரத்குமாருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.