சங்கரய்யாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா? மத்திய மந்திரி பதில்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா, சென்னையில் காலமானார். அவருக்கு வயது 102. உடல் நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணம் அடைந்தார். அவரின் உடலுக்கு முதலமைச்சர் உட்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின்மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் வந்து அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்சங்கரய்யா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார் […]

தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை அமைச்சர்‌ மு.பெ. சாமிநாதன்‌ , சங்கரய்யா உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை …

தமிழ்‌ வளர்ச்சி மற்றும்‌ செய்தித்‌ துறை அமைச்சர்‌ மு.பெ. சாமிநாதன்‌ (15.11.2023) உடல்நலக்‌ குறைவால்‌ காலமான மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ மூத்த தலைவர்‌ திரு.என்‌. சங்கரய்யா அவர்களின்‌, சென்னை குரோம்பேட்டை இல்லத்திற்கு. நேரில்‌ சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினார்‌. உடன்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ . இ. கருணாநிதி, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியின்‌ மாநிலச்‌ செயலாளர்‌ .கே. பாலகிருஷ்ணன்‌, மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி நிர்வாகிகள்‌ மற்றும்‌ சங்கரய்யா குடும்பத்தினர்‌ உள்ளனர்‌.

தோழர் சங்கரய்யாவின் மறைவு தமிழக அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடு செய்ய முடியாத இழப்பு .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இரங்கல்.

சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமான செய்தி பெரும் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என தாம் நம்பிக்கை கொண்டிருந்தாக, நிலையில், சங்கரய்யாவின் மறைவு மிகவும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 3 […]

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் N. சங்கரய்யா காலமானார்.

1 தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தலைவர், தனிமனிதரின் வரலாறு மட்டுமல்ல, தமிழக கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றின் பகுதி. 2.அந்நியர் ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்த சுதந்திர போர்க்களத்தில் மையப்புள்ளியாக விளங்கிய நகரங்களில் மதுரையும் ஒன்று… 3.படிப்பா? நாட்டின் விடுதலையா? என்ற கேள்வி மாணவரான சங்கரய்யாவின் நெஞ்சில் எழுந்தது. படிப்பை துறந்து நாட்டின் விடுதலைப் போராட்டப் பாதையை தனது வாழ்க்கை பாதையாக தேர்வு செய்தார்… 4 தனது வாழ்நாளில் சுமார் 8 ஆண்டுகள் […]

டாக்டர் பட்டத்தைவிடசங்கரய்யா என்றபெயர்ச்சொல் மேலானது

இந்தத் தப்புத் தாமதத்திற்குப் பிறகு ஒப்புதல் தந்தாலும்பெரியவர் சங்கரய்யா அதை இடக்கையால் புறக்கணிக்க வேண்டும். பெயருக்கு முன்னால் அணிந்து கொள்ள முடியாத மதிப்புறு முனைவர் பட்டத்தைவிடத்தீயைத் தாண்டி வந்தவரின் தியாகம் பெரிது. கொள்கை பேசிப் பேசிச் சிவந்த வாய் அவருடையது. இனி இந்த வாடிப்போன வெற்றிலையாலாவாய்சிவக்கப் போகிறது? கவிப்பேரரசு வைரமுத்து