தியாகி சங்கரய்யாவின் 102 வது பிறந்தநாள்

குரோம்பேட்டை தியாகி சங்கரய்யாவின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் வி.சந்தானம் சந்தித்து ஆசி பெற்றபோது எடுத்தபடம்.
கம்யூனிஸ்ட் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் தியாகி சங்கரய்யாவின் 102 வது பிறந்தநாள்

கம்யூனிஸ்ட் தலைவர் சுதந்திர போராட்ட வீரர் தியாகி சங்கரய்யாவின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு குரோம்பேட்டை நியூ காலனியை சேர்ந்த முன்னாள் காவல் கண்காணிப்பாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி ஆர்.அனந்தலட்சுமி (ரயில்வே அதிகாரி ஓய்வு) சந்தித்து ஆசி பெற்றபோது எடுத்தபடம்.
சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

தகைசால் தமிழர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும். தகைசால் தமிழர் சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு. காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க நடவடிக்கை.
102 வயது கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா பிறந்தநாள்.

சுதந்திர போராட்ட தியாகி மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் என்.சங்கரய்யாவின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு குரோம்பேட்டை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், சௌந்தர்ராஜன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் தா.மோ.அனபரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் என்.சங்கரய்யாவை நேரில் சந்தித்து சால்வை, மாலை அணிவித்து வாழ்த்து […]