சபரிமலை அய்யப்பன் கோவிலில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு இதுவரை 29 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. இதில் எருமேலி, அழுதக்கடவு காட்டுப் பாதையில் நடை பயணமாக சபரிமலைக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 59 ஆகும். இந்த வழிப்பாதையில் சராசரியாக தினசரி 1,500 முதல் 2,500 வரை பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். அதேநேரத்தில் வண்டிப்பெரியார், சத்ரம் புல்மேடு வழியாக இதுவரை 64 ஆயிரத்து 776 பக்தர்கள் […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நவம்பர் 17ஆம் தேதி ஆரம்பம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நவம்பர் 17ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதற்கான கோயில் நடை நவம்பர் 16ஆம் தேதி மாலை திறக்கப்படுகிறது. பக்தர்கள் கோயிலுக்கு வர சுவாமி தரிசனம் பெற ஆன்லைன் முன்பதிவு கட்டாயம். இந்த முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. தற்போது முன்பதிவு செயலியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசன தேதி மற்றும் நேரத் தேர்வு, காலநிலை தகவல், அவசர உதவி, மருத்துவ சேவை உள்ளிட்ட பல வசதிகளுடன் இந்த புதிய […]
சபரிமலையில் வரும் 11-ம் தேதி நடை திறப்பு..!
சபரிமலையில் இந்த ஆண்டு ஆடி மாத பிறப்புக்கு முன்பாக வரும் ஜூலை 11-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மாளிகைபுரம் கோயிலின் இடதுபுறத்தில் இருக்கும் நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் மாற்ற தேவப்பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வேறு இடத்தில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனால் கோயில் நடை 11-ம் தேதி திறக்கப்படுகிறது. 12-ம் தேதி நவக்கிரக பிரதிஷ்டை செய்யப்பட்டு 13-ம் தேதி கோயில் நடை அடைக்கப்படுகிறது.
சபரிமலையில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தடை
சபரி மலைக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை அங்கேயே விட்டு வருகிறார்கள். இதனை சாப்பிடும் விலங்குகள் இறந்து விடுகின்றன சமீபத்தில் ஒரு ஆண் யானை இது போன்று பிளாஸ்டிக் கழிவுகளை தின்று இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம் இதுபோன்று மலைப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சபரிமலை பகுதியில் ஹோட்டல்கள் மூலம் 24 டன் கழிவுகள் உருவாகின்றன. அதனையும் நீதிமன்றம் கண்டித்து […]
ஜனாதிபதி சபரிமலை பயணம் ரத்து
ஜனாதிபதி திரௌபதி முன்மு வருகிற 18-ஆம் தேதி சபரிமலை செல்வதாக இருந்ததுஇதையொட்டி அங்கு 18 ,19 தேதியில் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது . ஆனால் போர் சூழ்நிலை காரணமாக ஜனாதிபதியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது
சபரிமலைக்கு போகும் ஜனாதிபதி
ஜனாதிபதி திரௌபதி முர்மு மே 18ம் தேதி சபரிமலை தரிசனத்திற்காக கேரளா வரவுள்ளார் இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக கேரளா வரும் அவர் 18 மற்றும் 19ம் தேதிகளில் அவர் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார். ஜனாதிபதியின் வருகையை ஒட்டி, தேவஸ்வம் போர்டும் காவல்துறையும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. சபரிமலையில் ஜனாதிபதி வரும் நாளில் கடுமையான பாதுகாப்பும் கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படும். மெய்நிகர் முன்பதிவு உள்ளிட்ட ஏற்பாடுகள் மாற்றம் செய்யப்படும். வழக்கமான பக்தர்கள் அனுமதி அனேகமாக ரத்து செய்யப்படும் […]
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும். 2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 26ம் தேதி நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.
சபரிமலையில் கட்டுக்குள் வந்த பக்தர்கள் கூட்டம். நேற்று 95,000 பேர் சாமி தரிசனம் செய்த நிலையில், இன்று காலை முதல் பக்தர்கள் வருகை 40,000 ஆக சரிவு!

நாளை எரிமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும், 13ம் தேதி பந்தளத்தில் இருந்து தங்க ஆபரண ஊர்வலம் புறப்பாடும் நடைபெற உள்ளது! மகரஜோதிக்கு 5 நாட்கள் இருக்கும் நிலையில், இன்று தேவசம் போர்டு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
சபரிமலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்ட தங்க அங்கி..!

திருவனந்தபுரம், மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அய்யப்பனை தரிசனம் செய்து செல்கிறார்கள். சபரிமலையில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27- ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலை அய்யப்பனுக்கு வழங்கிய 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிப்பது […]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.

நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படுகிறது. நாளை முதல் நாள்தோறும் அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அய்யப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். 41 நாட்கள் நாள்தோறும் பூஜைகள் நடத்தப்பட்டு, டிசம்பர் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும். டிசம்பர் 30ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு ஜனவரி 15ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெறும். அன்று மாலை […]