உக்ரைன் மீது 500 டுகோன் ஏவி ரஷ்யா தாக்குதல்

மூன்று ஆண்டுகளாக தொடரும் போரில் மிகப்பெரிய இரவு நேர ட்ரோன் தாக்குதலாக, உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 500 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது என உக்ரைன் விமானப்படை கூறியது. உக்ரைன் மீது நேற்று இரவு 479 ட்ரோன்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் வரை 20 ஏவுகணைகள் பல்வேறு பகுதிகளில் ஏவப்பட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. ரஷ்யா முக்கியமாக மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளை குறிவைத்து தாக்கியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது

ஒரே நாளில் 40 ரஷ்ய விமானங்களை வீழ்த்திய உக்ரைன்

கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா ஆகிய 4 விமானப்படை தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் நேற்று தாக்குதல் நடத்தியது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் ரஷ்ய விமான படைத் தளங்கள் மீது குண்டுமழை பொழிந்தன.இதில் 4 விமானப்படை தளங்களிலும் 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் தீயில் எரிந்து அழிந்தன.