விண்ணில் ஏவப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலம்

ரஷ்யாவின் லூனா-25 என்ற விண்கலம் சோயுஸ்-2 ராக்கெட் மூலம் இன்று(ஆக.11) விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்ய 47 ஆண்டுகளுக்கு பின் ரஷ்யா இந்த விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் தரையிறங்குகிறது. இதற்காக மூன்று இடங்களை ரஷ்ய விஞ்ஞானிகள் தேர்வு செய்துள்ளனர்.

உக்ரைன் தாக்குதலால் தொடர்ந்து அடி வாங்கும் ரஷ்யா

உக்ரைன்- ரஷ்யா போர் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே மாஸ்கோவில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தி ஒரு கட்டிடத்தை தகர்த்தது. தற்போது கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின் எண்ணை கப்பல் ஒன்றை உக்ரைன் ராணுவத்தின் ட்ரோன்கள் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. கருங்கடல் வழியே வெளிநாடுகளுக்கு உக்ரைன் தானியம் ஏற்றுமதி செய்வதை ரஷ்யா தடுத்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது

உக்ரைனை பலமாகத் தாக்கத் தயாராகும் ரஷ்யா

ரஷ்யா மீது உக்ரைன் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இது, மாஸ்கோ அருகே இரு கட்டடங்களை சேதப்படுத்தின. ஆனால், இதில் உயிர் சேதம் எதுவும் பதிவாகவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ரஷ்ய ராணுவம், உக்ரைனுக்கு தக்க பதிலடி கொடுக்கத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாஸ்கோ நகர சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன.

உக்ரைனில் 17ம் நூற்றாண்டு தேவாலயம் தகர்ப்பு

உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைனின் ஒடேசா துறைமுக நகரில் உள்ள 17ம் நூற்றாண்டு தேவாலயத்தை குண்டு வீசி தகர்த்துள்ளது. தேவாலயத்தின் கட்டடமும், உள்ளே இருந்த சிலைகளும் கடுமையாக சேதமடைந்துள்ளன. கலாச்சாரத்தை சிதைப்பதை மன்னிக்க முடியாது. இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று உக்ரைன் கூறியுள்ளது.