தமிழகம் மீது புடின் அக்கறை!

இந்தியா, ரஷ்யா இடையிலான இருதரப்பு விஷயங்கள் முழு அளவில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவுக்கு காஸ், எண்ணெய், நிலக்கரி சப்ளை செய்வதில் ரஷ்யா முக்கிய நாடாக உள்ளது’. ‘தமிழகத்தில் முக்கிய திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்துகிறோம். கூடன்குளம் அணுமின் நிலையம் மேலும் மேம்படுத்தப்படும். இதன் மூலம் இந்தியர்கள் மிக மலிவான விலையில் மின்சக்தியை பயன்படுத்தலாம்- டில்லியில் ரஷ்ய அதிபர் புடின் பேட்டி கூடன்குளத்தில் உள்ள 6 உலைகளில் தற்போது இரண்டில் மின் உற்பத்தி நடக்கிறது. 3வது உலைக்கான யுரேனியம் […]

ரஷ்யா எங்கள் நண்பன். நரேந்திர மோடி.

இந்தியா, ரஷ்யா இரு நாட்டு உறவு பலமானது. இந்த நட்பு உறவுக்கு புடின் 25 ஆண்டுகளுக்கு முன்னேரே நமக்கு உதவியாக இருந்தார். பொருளாதார முன்னேற்றம், யூரியா தயாரிப்பு, அணு தயாரிப்பு விஷயத்தில் இருநாடுகளும் ஒத்துழைப்புடன் செல்லும். ரஷ்யர்களுக்கு விரைவில் 30 நாள் இலவச சுற்றுலா விசா வழங்க ஏற்பாடு நடக்கிறது. உலகில் அமைதிக்காக ரஷ்யாவுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும். உலகில் பயங்கரவாத ஒழிப்பில் முழு கவனத்துடன் செயல்படுவோம்.

ரஷ்ய அதிபர் புதன் விருந்தில் முருங்கை இலை சூப்

குடியரசுத் தலைவர் மாளிகையில், ரஷிய அதிபருக்கு சிறப்பான விருந்து வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பாரம்பரியமிக்க உயர்ந்த சுவையுடைய சைவ உணவுகள் பரிமாறப்பட்டன. அதில், முருங்கை இலை சாறு, சுவையான ரசம், காஷ்மீரி வால்நட் குச்சி டூன் செடின், கார சட்னி – ஜோல் மோமோ என காஷ்மீர் முதல் தமிழகம் வரை மிகவும் பாரம்பரியமான உணவுகள் தேர்வு செய்யப்பட்டு மிகுந்த ருசியுடன் தயாரிக்கப்பட்டு பரிமாற்றப்பட்டுள்ளது. முக்கிய உணவுகளின் பட்டியலில் ஸஃப்ரானி பனீர் ரோல், பாலக் மேதி மட்டர் […]

உக்ரைன் மீது 574 டுரோன் தாக்குதல்ரஷ்யா அதிரடி

போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியில்முடிந்ததை தொடர்ந்துஉக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா மேலும் தீவிரப்படுத்தியது. அதன்படி நேற்று ஒரேநாளில் உக்ரைன் மீது 574 டிரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை / ரஷியா அனுப்பியது. போர் தொடங்கிய பிறகு இதுவரை நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது வாகும். இந்த தாக்குதலில் /லிவிவ், முகா செவோ, பல டிரான்ஸ்கார்பதியா ஆகிய நகரங்களில் உள்ள கட்டிடங்கள்,தொழிற்சா /லைகள் சேதமடைந்தன. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு […]

ரஷ்யா நோக்கி 2 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் – டிரம்ப்.*

2 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களை ரஷ்யாவை நோக்கி நிலைநிறுத்தஉத்தரவிட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு. ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின் கருத்துக்குபதிலடி கொடுக்கும் நடவடிக்கை என டிரம்ப் விளக்கம்.

ரஷ்யா ஜப்பான் சுனாமி அலைகள் தாக்கின

ரஷ்யாவில் நிலநடுக்கம்.8 .7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ஜப்பானில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க அதிகாரிகள் அலாஸ்கா மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தனர் தற்போது ரஷ்யா ஜப்பானின் சில பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கி உள்ளன 1.6 மீட்டர் உயரம் உள்ள அலைகள் கரையை தாக்கியதாக தெரியவந்துள்ளது இதனால் ஜப்பானில் ஒரு தீவிலிருந்து மக்கள் தாரைதாரையாக வெளியேறி வருகிறார்கள்

ரஷ்யாவில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவில் நிலநடுக்கம்.8 .7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க அதிகாரிகள் அலாஸ்கா மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். பசிபிக் பெருங்கடலில் ஒரு மீட்டர் உயரம் வரை அலைகள் எழும்பும் என்று ஜப்பானிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனினும் ரஷ்யாவில் இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை.

நிலவில் அணு மின் நிலையம் – ரஷ்யா திட்டம்

நிலவில் அணுமின் நிலையம் அமைக்க ரஷ்ய விண்வெளி மையம் திட்டம். இதில் இணைந்து செயல்பட இந்தியா, சீனா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது! 2036-க்குள் இந்த அணு மின் நிலையம் செயல்பாட்டுக்கு வரும் எனவும், ரஷ்யா-சீனா இணைந்து உருவாக்கி வரும் சர்வதேச நிலா ஆராய்ச்சி நிலையத்துக்கு (ILRS) தேவையான மின்சாரத்தை இந்த அணு மின் நிலையம் வழங்கும் எனவும் தகவல்

இஸ்ரேலுக்கு ரஷ்யா, துருக்கி கடும் கண்டனம்!

மத்திய கிழக்கில் பிராந்திய மோதலைத் தொடங்க இஸ்ரேல் முயற்சிப்பதாக துருக்கி கண்டனம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் குற்றமாகும் என ரஷ்யா கடும் கண்டனம்

ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக புதின் அறிவிப்பு

ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று விளாதிமிர் புதின் 5வது முறையாக அதிபராகியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 2030 வரை ரஷ்யாவின் அதிபராக புதின் நீடிப்பார். கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து ரஷ்யாவின் பிரதமர் அல்லது அதிபராக புதின் பதவி வகித்து வருகிறார்.