அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு புதிய விதிகள் .

புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்டத்தை 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இதற்கு, 2023ல் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தாலும், விதிகள் வகுக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், இந்த சட்டத்துக்கான விதிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அடுக்குமாடி குடியிருப்பின் பெரும்பான்மை உரிமையாளர்கள் அல்லது கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடு குடியிருப்பு தொடர்பான பல்வேறு விவரங்களுடன் அடுக்குமாடி குடியிருப்பை பதிவு செய்ய வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதங்களுக்குள் […]
நாளை வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்

தமிழகத்தில் நாளை வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என சத்யபிரதா சாகு தகவல். 7ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும் எனவும் சாகு தகவல்.
பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது.

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என, சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுறுத்தல். இந்த அறிவிப்பை காவலர்கள் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும் எனவும், அனைத்து காவல் நிலைய தகவல் பலகையில் இதை ஒட்ட வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.