ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் – மாஜிஸ்திரேட் ஆய்வு

சோழிங்கநல்லூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திக் ஆய்வு ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் நீதிபதி கார்த்திக் ஆய்வு உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் குடும்பத்தாரிடமும் விசாரணை

நீலாங்கரையில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை

சீசிங் ராஜா என்கவுன்டர் … பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று போலீசாரால் என்கவுண்டர் செய்ய பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது …. கைது செய்யப்பட்ட சீசிங்கு ராஜா ஆந்திராவிலிருந்து சென்னைக்கு அழைத்து வரும்போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப செல்ல முயன்றதாக கூறபடுகிறது. இந்நிலையில் ரவுடி சீசிங்கு […]

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்

▪️. போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல். தலைமறைவாக இருந்த அவர் கடப்பாவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.. என்கவுன்ட்டர் செய்யப்பட்ட அவர் மீது 5 கொலை உட்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன..

ஆம்ஸ்ட்ராங் கொலை தாம்பரத்தில் பிடிபட்ட ரவுடி

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தேடப்படும் சீசிங் ராஜாவின் கூட்டாளி சஜித் தை தாம்பரம் போலீசார் பிடித்து விசாரணை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தேடிவரும் நிலையில் தாம்பரம் காவல் நிலைய கொலை வழக்கு, கொலை முயற்சி, அடிதடி, வழிபறி என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் குற்றவாளர் சஜித் என்பவனை பிடித்த தாம்பரம் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.

கரூரில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை

கரூர் நீதிமன்றத்தில் வாய்தாவிற்காக ஆஜராகி திரும்பி வரும்பொழுது கரூர் புறவழி சாலை தடா கோவில் அருகே மதுரை அனுப்பானடியை சேர்ந்த ராமர்பாண்டி என்ற ரவுடி ஓட ஓட வெட்டி படுகொலை, உடன் வந்த முத்துராஜா படுகாயங்களுடன் கரூர் மருத்துவமனையில் அனுமதி, இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2012 ஆம் ஆண்டு தேவர் குருபூஜைக்கு சென்று வரும்போது மதுரை அவனியாபுரம் பகுதியில் வெடிகுண்டு வீசி 7 பேர் இறந்த வழக்கில் முதல் குற்றவாளி ராமர்பாண்டி […]

பேக்கரியில் ஆயிரம் ரூபாய் மாமூல், தாபாவில் ஓசி சாப்பாடு, இறைச்சிக் கடை உரிமையாளருக்கு வெட்டு என கஞ்சா போதையில் அடுத்தடுத்து அட்டூழியம் செய்த ரௌடிகள் மூன்றுபேரையும் கைது செய்தது போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகேயுள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்த மயில்வேல் என்பவர் கடந்த ஏழாம் தேதி, சத்தரைக் கிராமத்திலுள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மயில்வேலின் இறுதி ஊர்வலத்தையொட்டி, அவரின் அண்ணன் மகனும் ரௌடியுமான பாபா என்கிற வினோத் மற்றும் இவரின் கூட்டாளிகளான முகிந்தர், பிரவீன்குமார் ஆகிய மூன்றுபேரும் சேர்ந்து, கஞ்சா போதையில் அப்பகுதியிலுள்ள கடைகளை அடைக்குமாறு, அட்டூழியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

திருவள்ளூரில் அடாவடிதனம் செய்த ரவுடிகளை பிடித்து சிறப்பு செய்த காவல் துறை

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியிலுள்ள ஸ்வீட்ஸ் பேக்கரி கடையொன்றில், பட்டாக் கத்தியைக் காட்டி ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கிச்செல்லும் ரௌடிகளின் மிரட்டல் சி.சி.டி.வி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து ரௌடிகளை கைது செய்தனர் காவல்துறையினர். போலீசார் பிடிக்க முற்பட்டபோது தப்பி ஓடிய ரவுடிகள் வழுக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

திருச்சி திருவானைக்காவலில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

திருவானைக்காவலை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ஆட்டுத்தலை மணி என்பவர் வீட்டில் வீசப்பட்டது. அடையாளம் தெரியாத 3 பேர், 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோட்டம். நாட்டு வெடிகுண்டு வீசியவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை.