ஆந்திர முன்னாள் மந்திரியும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார். அவர் தனது சுய நலனுக்காக எதையும் செய்வார். ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. தனது தவறை மறைக்கும் விதமாக லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். கடந்த மார்ச் மாதத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக்காலம் முடிந்தது. ஜூலை மாதத்தில் திருப்பதி கோவிலுக்கு நெய் வந்தது. அதில் 4 லாரி நெய் அனுமதிக்கப்பட்டது. அதில் வனஸ்பதி கலந்து இருந்ததால் நிராகரிக்கப்பட்டது. திருப்பதி லட்டு […]

சர்ச்சையில் சிக்கிய ரோஜா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று, நடிகையும் ஆந்திராவின் அமைச்சருமான ரோஜா, சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் தரிசனம் முடிந்து கோயில் வெளியே வந்தபோது வயதில் மூத்த 2 பெண்கள் பரிசுகள் கொடுத்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.