எல்ஜி-யின் புதிய இரண்டுசக்கர வீட்டு ரோபோட்! 

தென்கொரியாவை தலைமையகமாகக் கொண்ட நிறுவனமான எல்ஜி, வரும் சிஇஎஸ் 2024 தொழில்நுட்ப மாநாட்டில் தனது புதிய செய்யறிவு ரோபோவை அறிமுகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.  இந்த புதிய ரோபோட் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, வீட்டில் உள்ள சின்னச் சின்ன வேலைகளை செய்யும் திறன்கொண்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டிற்குள் உலாவி விளக்குகளை, மின் விசிறிகளை அணைத்தல், செல்லப் பிராணிகளைப் பார்த்துக்கொள்ளுதல் போன்றவற்றை செய்யும் திறன்கொண்டது. மேலும், வீட்டின் நேரடி காணொலிகளை பார்க்க உதவுதல், வீட்டில் ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் உரிமையாளர்களைத் தொடர்புகொள்ளுதல் போன்றவற்றை சிறப்பாகச் செய்யும் […]