சேலையூர் பகுதியில் பட்டப் பகலில் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு

சேலையூர் அருகே அடுத்த அடுத்த இரண்டு நாட்களாக பட்டம் பகலில் இரு பெண்களிடம் 5 சவரன் செயின் பறிப்பு, இரு சம்பவத்திலும் ஒரே நபர் ஈடுபட்டு இருக்கலாம் என சிசிடிவி காட்சியை கைப்பற்றி சேலையூர் போலீசார் விசாரணை சேலையூரை அடுத்த ராஜகீழ்பாக்கம் மாருதி நகரை சேர்ந்த 70 வயது பெண்மணி சித்தாலஷ்மி, நேற்று மதியம் பால் வாங்க பிற்பகல் 1.30 மணிக்கு வீட்டருகே நடந்துசென்றார். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இரண்டு சவரன் நகையை பறித்து சென்றான். […]

கொள்ளையடித்த நகைகளை கோவில் முன்பே வைத்து சென்ற திருந்திய திருடர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே அத்திமுகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் நகைகள் திருடப்பட்டது . இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் கொள்ளையர்கள் தாங்கள் திருடிய நகைகளை கோவில் முன்பே இன்று அதிகாலை வைத்து விட்டு சென்றனர் .

சென்னை அழைத்து வரப்பட்ட வடமாநில கொள்ளையர்கள்

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை நகைக்கடையில், ஏப்.15ல் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அசோக், சுரேஷ் ஆகிய இரு குற்றவாளிகளை சென்னைக்கு விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்த போலீசார்