நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு காவல்துறை கட்டுப்பாடுகள்.

வெளியூரில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரனூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றம். கனரக வாகனங்கள் இல்லா சாதாரண வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்ல வேண்டும். திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்கவும். கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல இன்று பகல் 2 மணி முதல் ஜன.20 வரை தடை. பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பகல் 2 மணி […]

தமிழக வெற்றி கழக மாநாட்டில் பங்கேற்கும் நடிகர் விஜய் செல்வதற்காக பிரத்யேக சாலை அமைப்பு

கூட்ட நெரிசலில் விஜய் சிக்காமல் இருக்க, சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு சிமெண்ட் சாலை நேரடியாக கொடியை ஏற்றிவிட்டு, மாநாட்டுத் திடலுக்கு செல்லும் வகையில் ஏற்பாடு மேலும் விஐபிகள், ஆம்புலன்ஸ் செல்வதற்கென தனி சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது

போலீசாரை பாராட்டிய பொதுமக்கள்

தாம்பரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருவதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது இதனால் சாலைகளில் பள்ளங்கள் பல இடங்களில் ஏற்பட்டுள்ளன. தாம்பரம் போலீசார் தார் கலவை கொண்டு பள்ளங்களை நிரப்பினார்கள். இதனை பொதுமக்கள் பாராட்டினார்கள்.

சேலையூர் அருகே சாலையில் கிடந்த ரூ 98 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு

தாம்பரம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த 98 ஆயிரம் பணத்தை தனியார் நிறுவன ஊழியர் சகோதர் மூலம் நாடார் சங்க நிர்வாகிகளுடன் சேலையூர் காவல் நிலையத்தில் ஓப்படைப்பு சென்னை சேலையூர் அடுத்த மப்பேடூ புதூர் நகரை சேர்ந்தவர் டானியல்(34), தனியார் நிறுவன ஊழியரான இவர் அதிகாலை பணிக்கு செல்ல வெங்கம் பாக்கம் பிரதான சாலை வழியாக சென்றார். அப்போது ஒரு சிறிய அட்டை பெட்டியில் 500 ரூபாய் தாள்கள் கட்டாக கிடந்துள்ளது. அதனை எடுத்து என்னிய போது […]

நெடுங்குன்றம் சாலையில் திருநங்கைகள் திடீர் மறியல்

10 சென்ட் நிலம் வாங்க முன்பணம் 13 லட்சம் கொடுத்த நிலையில் நிலத்தை வேறு ஒரு நபருக்கு விற்கப்பட்டதால் நெடுங்குன்றம் பிரதான சாலையில் திருநங்கைகள் சாலை மறியல் வாகனங்கள் செல்ல முடியாமல் மர துண்டுகளை போட்டும் சாலையில் அமர்ந்தும் போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியதால் பரபரப்பு தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் திருநங்கைகள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலத்திற்காக அதே ஊரைச் சேர்ந்த விஜி என்பவரிடம் ஒரு செண்ட் இடம் ₹3,30,000 என 10 சென்ட் 33 […]

உலகின் நடந்து செல்லக்கூடிய நீண்ட சாலை…..

உலகின் மிக நீண்ட நடந்து செல்ல கூடிய பாதை தென் ஆப்பிரிக்க நகரம் கேப் டவுனில் இருந்து ரஷ்ய நாட்டில் மகதன் (Magadan) வரை உள்ளது. விமானங்கள் அல்லது படகுகள் தேவையில்லை, பாதையில் பாலங்கள் உள்ளன. தூரம் 22,387 கிமீ மற்றும் பயண நேரம் 4492 மணிநேரம், இடைவிடாத நடைப்பயணம் சென்றால் 187 நாட்கள் அல்லது தினமும் 8 மணி நேரம் நடந்தால் 561 நாட்கள் வழியில், 17 நாடுகள், 6 நேர மண்டலங்கள் மற்றும் ஒரு […]

செங்கல்பட்டு சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

அடுத்தடுத்து வாகனங்கள் சரமாரியாக ஜிஎஸ்டி சாலையில் மோதியதால் பரபரப்பு. செங்கல்பட்டு அருகே சென்னை நோக்கி வந்த லாரி, ஆம்னி பேருந்து, அரசுப் பேருந்து மோதியது. ஒன்றன்பின் ஒன்று மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி, பலர் படுகாயமடைந்தனர்.

பல்லாவரத்தில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பல்லாவரத்தில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர் அமைப்பு சார்பாக 300 பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். பல்லாவரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதன்மை போக்குவரத்து காப்பாளர் பூ.கருப்பையா தலைமையில் பல்லாவரம், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய செபாஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 300 மாணவ மாணவிகள் பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் விழிப்புணர்வு பிரசார பேரணியை துவங்கி பம்மல் […]

சென்னை போக்குவரத்து!

விமான நிலையத்தில் இருந்து அண்ணா சாலை வரையும், கிழக்கு கடற்கரை சாலையிலும் போக்குவரத்து சீராக உள்ளது ▪️ புழல் ஏரி நீர்திறப்பு காரணமாக மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை சாலைகளில் செல்ல அனுமதி இல்லை ▪️ தாம்பரம் ஜி.எஸ்.சாலையில் போக்குவரத்து சீராக உள்ளது ▪️ ஓ.எம்.ஆர்., பெருங்குடி, அடையாறு, கோட்டூர்புரம், சாந்தோம், மீனம்பாக்கம், கிண்டி, மத்திய கைலாஷ், திருவான்மியூர் பகுதிகள் சீராக உள்ளது 1.கணேசபுரம் சுரங்கப்பாதை2.கெங்குரெட்டி சுரங்கப்பாதை3.செம்பியம் சுரங்கப்பாதை4.வில்லிவாக்கம் சுரங்கப்பாதை5.துரைசாமி சுரங்கப்பாதை6.மேட்லி சுரங்கப்பாதை7.ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை8.மவுண்ட் – தில்லை […]

பள்ளி குழந்தையுடன் ஸ்கூட்டரில் மழை நீரில் விழுந்த தாய் 200 பேர் விழுந்த பரிதாபம்

மேடவாக்கத்தில் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய் ஸ்கூட்டரில் செல்லும்போது மழை நீரில் கீழே விழுந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேடவாக்கம், வி.ஜி.பி பாபு நகர் முதல் மெயின்ரோட்டில் மேடவாக்கம் பஜார் தண்ணீர் மொத்தமும் இங்கே குவிந்துள்ளது. பெரிய பள்ளம் ஏற்பட்டு குளம்போல் நீர் தேங்கி உள்ளதால் 2 நாளில் சுமார் 200 பேருக்கு மேல் இரு சக்கர வாகனங்களில் இருந்து கீழே விழுந்துள்ளனர். மேலும் இன்று பள்ளி சென்று குழந்தையை அழைத்து வந்த தாய் […]