நீட் விலக்கு மசோதா: ஆளுநர் ரவியுடன் பெற்றோர் வாக்குவாதம்

நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பெற்றோர் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டு ஆளுநர் ரவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுடன் ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நீட் தேர்வுக்கு எப்போது விலக்களிப்பீர்கள் என்று பெற்றோர் நேருக்கு நேர் கேள்வி எழுப்பியதால் ஆளுநர் ரவிக்கும், மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், நீட் தேர்வு […]

அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் குடும்பத்துடன் தரிசனம்

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆளுநர் ரவி 2 நாட்கள் பயணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று சென்றார். இந்நிலையில், இன்று (ஆக. 11) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆளுநர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். ஆளுநருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு

திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான ஆவணங்களை டிரங்க பெட்டி ஒன்றில் DMK files 2 என்ற பெயரில் தமிழ்நாடு கவர்னர் ஆர் என் ரவியிடம் ஒப்படைத்த தமிழ்நாடு பாஜக

கவர்னர் ரவிக்கு எதிராக திமுக போஸ்டர் யுத்தம்

தி.மு.க.,வினர் சென்னையில் கவர்னர் ரவிக்கு எதிராக, போஸ்டர் ஒட்டியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஊழல்வாதிகளை கவர்னர் ரவி காப்பாற்றுவதாக, தி.மு.க., சட்டத்துறை இணை செயலர் ரவிச்சந்திரன், சென்னையில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.அதில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில், நீதிமன்ற விசாரணை துவக்க, இசைவு ஆணை வழங்கக் கோரி, தமிழக அரசால் அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு, கவர்னர் பதில் அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஏன்? சட்டத்துறை அமைச்சரின் கடிதத்துக்கு பிறகு, பதில் அளிக்க வேண்டிய.நிர்ப்பந்தத்திற்கு ஆளான கவர்னர், அ.தி.மு.க., முன்னாள் […]